மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோகிஷ் ஷர்மா விலகுகிறாரா?

ரோகிஷ் ஷர்மா
ரோகிஷ் ஷர்மா

ந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு 2024ல்நடைபெறவுள்ளது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் ஷர்மா தொடர்வாரா என்பது கேள்விக் குறியாகிவுள்ளது.

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் மாதம் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவைப்படாத வீரர்களை வேறு அணியிடம் கொடுத்து அந்த அணியில் தனக்கு தேவையான வீரர்களை வாங்கிக்கொள்கிறனர்.

ஒவ்வொரு அணியும் தனக்கென ஒவ்வொரு திட்டம் வைத்திருப்பார்கள். அந்த வகையில் தான் ஏலத்தில் வீரர்களை மாற்றிக் கொள்வார்கள். இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஐந்து முறை கப் அடித்து உள்ளது. இந்த ஐந்து முறை வெற்றிக்கு முக்கிய காரணம் நிச்சயம் கேப்டன் ரோஹித் ஷர்மாதான். கடைசியாக ரோஹித் தலைமையில் 2020ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் வெற்றிபெற்றது.

அதன்பின் மூன்று ஆண்டுகள் மும்பை இந்தியன்ஸ் வெற்றிபெற முடியாமல் தடுமாறி வந்தது. ரோஹித் கேப்டன்ஸி நன்றாக செய்தாலும் பேட்ஸ் மேனாக சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று மும்பை அணி நிர்வாகம் கருதுகின்றது . 2020ம் ஆண்டிற்கு பிறகு 381, 268, 332 ரன்கள் என்ற வகையில் தான் விளையாடி வந்தார். கடைசியாக 2019ம் ஆண்டுத்தான் 400 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக டோஹித் ஷர்மாவை கொடுத்து இளம் வீரரான ஹார்திக் பாண்டியாவை ஏலம் மூலம் வாங்கலாம் என்று மும்பை அணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் அணியும் ஹார்திக் பாண்டியாவை விடுவித்து ரோஹித் ஷர்மாவை தங்கள் அணிக்கு கொண்டு வரும் திட்டத்தில் தான் உள்ளனர் என்ற தகவலும் வெளியானது.

ஆனால் மும்பை இந்தியன்ஸிலிருந்து ரோஹித் ஷர்மாவை குஜராத் அணிக்கு மாற்றும் முயற்சி நடைபெற்று வருகிறது என்ற தகவலை கேட்டதும் ரசிகர்கர் தங்கள் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர் . ஏனென்றால் மும்பை அணி என்றாலே ரோஹித் ஷர்மாதான். மும்பை அணியின் இதுநாள் வரை அடைந்த வெற்றிக்கு காரணம் ரோஹித் ஷர்மாத்தான்.

ஹார்திக் பாண்டியா மும்பை அணிக்கு திரும்புவது மகிழ்ச்சித்தான் ஆனால் அதற்கு ரோஹித்தை அணியிலிருந்து மாற்றுவது மிக மோசம் என்றும் ரசிகர்கள் இணையத்தளங்களில் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.மேலும் ஏற்கனவே ரோஹித் ஷர்மா டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com