8வது முறையாக ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்திய ஜடேஜா!

8வது முறையாக ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்திய ஜடேஜா!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் இரண்டாவது இன்னிங்சை ஆஸ்திரேலிய அணி துவக்கியதிலிருந்து நேற்றைய ஆட்டம் முடிவும் வரை இந்திய பவுலர்களின் ஆதிக்கம் ஓங்கியிருந்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி ரன்களை எடுக்க திணறிவருகிறது.

முதல் இன்னிங்சில் இந்திய அணி 296 ரன்களை எடுத்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 173 ரன்கள் முன்னிலை வகித்த நிலையில், இரண்டாவது இன்னிங்சை ஆஸ்திரேலிய அணி துவக்கியது.

துவக்க ஆட்டக்காரர்களாக, உஸ்மன் க்வாஜா, டேவிட் வார்னர் களமிறங்கிய நிலையில், ஆரம்பம் முதலே இந்திய அணி பவுலர்களின் பந்தை சமாளிக்க முடியாமல் இருவரும் தடுமாறினர். ஆட்டத்தின் 4வது ஓவரில் முகம்மது சிராஜ் பந்தில் டேவிட் வார்னர் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் அவுட்டானார். அடுத்து 15வது ஓவரில் உமேஷ் யாதவ் வீசிய பந்தில் உஸ்மன் க்வாஜாவும் அவுட்டானார்.

அடுத்து மார்னஸ் லபுசேன், ஸ்டீவ் ஸ்மித் இருவரும் சற்று அடித்து ஆட ஆரம்பித்தனர்.

இந்நிலையில், ஜடேஜா பந்து வீசி வந்த நிலையில், அவரது பந்தில் அதிகமாக அவுட்டாகி வருவதால், இந்த முறை ஜடேஜாவின் பந்த வெளுத்துவாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அடித்து ஆடியும் வந்தார்.

இருந்தும் விதி யாரை விட்டது. 7 முறை ஜடேஜா பந்தில் அவுட்டான ஸ்டீவ் ஸ்மித், ஜடேஜா பந்தை அடிக்க முயன்று அது ஷர்துல் தாக்கூர் கையில் கேட்சாக தஞ்சமடைந்தது.

இதையடுத்து ஜடேஜா 8வது முறையாக ஸ்டீவ் ஸ்மித்தை அவுட்டாக்கியுள்ளார். இதற்கு முன்னதாக, இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் பிராட் 9 முறை ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்தியுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக அஸ்வின், ஆண்டர்சன் 8 முறை ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்தியிருந்த நிலையில், தற்போது ஜடேஜாவும் 8வது முறையாக ஸ்டீவ் ஸ்மித்தை அவுட்டாக்கியுள்ளார்.

நேற்றைய போட்டியில் ஜடேஜா டிராவிஸ் ஹெட் விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். 3ம் நாள் ஆட்ட நேர முடிவுப்படி, ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்த நிலையில், 296 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com