காமன்வெல்த் கேம்ஸ்; இந்தியாவுக்கு 3-வது தங்கம்!

காமன்வெல்த் கேம்ஸ்; இந்தியாவுக்கு 3-வது தங்கம்!

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வரும் நிலையில், ஆடவருக்கான 67 கிலோ எடைப்பிரிவு பளு தூக்குதலில் இந்தியாவின் ஜெரிமி லால் ரிங் தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இப்போட்டிககளில் இந்தியாவுக்கு 3 தங்கப் பதக்கங்களும் ஒட்டுமொத்தமாக 6 பதக்கங்களும் கிடைத்துள்ளன.

-இதுகுறித்து விளையாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்ததாவது:

கடந்த ஜூலை 29-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கி நடந்து வரும் காமன்வெல்த் போட்டிகளில் மறுநாளே (ஜூலை 30) இந்தியாவின் பளுதூக்கும் வீராங்கனையான மீராபாய் சானு 49 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.

இதையடுத்து 19 வயதான இந்திய பளுதூக்கும் வீரர் ஜெரிமி லால் ஸ்னாட்ச் பிரிவில் இரண்டாவது வாய்ப்பில் 140 கிலோ எடை தூக்கி பிரமிக்க வைத்தார். அடுத்து கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 160 கிலோ எடை தூக்கினார். இதன்மூலம் மொத்தம் 300 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 

இந்நிலையில் ஆடவருக்கான 73 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் அச்சிந்தா ஷூலி தங்கப்பதக்கம் வென்றார். ஒட்டுமொத்தமாக 313 கிலோ எடையை தூக்கி அவர் அசத்தினார்

இதன் மூலம் நடப்பு காமன்வெல்த் தொடரில் இந்திய அணி 3 தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்திய அணிக்கு 6 பதக்கங்கள் கிடைத்துள்ளன

இவ்வாறு இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com