செஸ் ஒலிம்பியாட்; இந்திய ஆடவர் பி அணி முன்னிலை!

செஸ் ஒலிம்பியாட்; இந்திய ஆடவர் பி அணி முன்னிலை!
Published on

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய ஆடவர் 'பி' அணி, தொடர்ந்து 4 போட்டிகளில் வெற்றிபெற்று, புள்ளிப் பட்டியலில் முன்னிலையில் நீடிக்கிறது

இதுகுறித்து இந்திய சதுரங்கக் கூட்டமைப்பு தெரிவித்ததாவது:

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்தியா சார்பில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் தலா 3 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த போட்டிகளின் 4-வது சுற்றில் ஆடவர் பிரிவில் இந்தியா '' அணி பிரான்ஸ் அணியை எதிர்கொண்டது. ஆனால் இந்த ஆட்டம் இரு நாட்டுக்கும் வெற்றி தோல்வியின்றி 2-2 என கணக்கில் டிராவாக அமைந்தது.

இந்நிலையில் நேற்று இந்திய 'பி' அணி, இத்தாலியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில், குகேஷ் மற்றும் நிஹில் வெற்றியை வசப்படுத்தினர். ஆனால், பிரக்ஞானந்தா 42-வது நகர்தலிலும், சத்வானி 30-வது நகர்த்தலிலும் டிராவை சந்தித்தனர். முடிவில், 3-1 என்ற புள்ளிக்கணக்கில் இத்தாலி அணியை வீழ்த்தி, இந்தியா தொடர்ந்து தனது 4-வது வெற்றியை பதிவு செய்தது. 

மேலும் இப்போட்டியில் ஆடவர் 'சி' அணி, ஸ்பெயின் நாட்டுடன் விளையாடியதில் ஸ்பெயின் அணி 2.5 – 1.5 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்றது. இதன் மூலம் இந்த தொடரில்  இந்திய ஆடவர் 'சி' அணி முதல் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

-இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com