சர்வதேச செஸ் கூட்டமைப்பு: துணைத் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு! 

சர்வதேச செஸ் கூட்டமைப்பு: துணைத் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு! 

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடந்து வரும் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா ஆகஸ்டு 9-ம் தேதி நடக்க இருக்கிறது. இந்நிலையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் அர்காடி வோர்கோவிச் சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக 157 ஓட்டுகள் கிடைத்தன. தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில் விஸ்வநாதன் ஆனந்துக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது; 

சர்வதேசப் புகழ்வாய்ந்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தமிழ்நாட்டுக்கே பெருமையான தருணம்.

கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் போன்ற மாசற்ற நேர்மையும், பரந்த அனுபவமும் கொண்ட ஒருவர் உலக செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக இருப்பதால் இந்த விளையாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என நம்புகிறேன்.

அதேபோல, உலக செஸ் கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அர்காடி வோர்கோவிச்சுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். அவரது இந்த 2-வது பதவிக்காலமும் வெற்றிகரமாக அமையும் என நம்புகிறேன் 

இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் தன் வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com