ஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வென்றது இந்தியா!

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வென்றது இந்தியா!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-4 சுற்றில், இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுடன் மோதி தோல்வி அடைந்தது.

இதன் மூலம் இறுதி வாய்ப்பை இழந்தது. இந்நிலையில், இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் நேற்று ஆப்கானிஸ்தானுடன் மோதி, வெற்றி பெற்றது.

நேற்று இந்தியா – ஆப்கானிஸ்தானுக்கிடையே நடந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது. எனவே முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஆவேஷ் கானுக்குப் பதில் தீபக் சாகர் சேர்க்கப்பட்டார்.

முதலில் களமிறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் விராட்கோலி ஜோடி நிலைத்து நின்றதால், அணியின் ஸ்கோர் அதிகரித்தது. பின்னர் கே.எல்.ராகுல் 41 பந்துகளில் 62 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

அடுத்ததாக இறங்கிய சூர்யகுமார் யாதவ் 6 ரன்களுடன் வெளியேறினார். ஆனால் மறுபுறம் விராட் கோலி தனது அதிரடியான விளையாட்டை வெளிப்படுத்தினார். இதனால் அணியின் ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் 212 ரன்களை எட்டியது.

விராட் கோலி 61 பந்துகளில் 122 ரன்களை விளாசியதோடு கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரிஷப் பண்ட் 20 ரன்களுடன் களத்தில் இருந்தார். விராட் கோலி 122 ரன்களை எடுத்தார்..

இதையடுத்து, 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கன் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 111 ரன்களில் சுருண்டது.அந்த அணியில் இப்ராஹிம் ஜட்ரான் மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில்,ஆப்கன் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்திய 101 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி அடைந்தது. இதையடுத்து விராட் கோலி, ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com