19 வயதில் சாம்பியன்: கிராண்ட் ஸ்லாம் வென்ற அல்காரஸ்!

19 வயதில் சாம்பியன்: கிராண்ட் ஸ்லாம் வென்ற அல்காரஸ்!
Published on

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் 19 வயதேயான ஸ்பெயின் வீரர் அல்காரஸ் கார்பியா சாம்பியன் பட்டம் வென்றார்.

அந்த வகையில், முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற அவர், தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தொடரின் மூன்றாம் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் கார்பியா, 5ஆம் நிலை வீரரான நார்வேயின் கேஸ்பர் ரூட் உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

கிராண்ட் ஸ்லாம் போட்டியில் முதல் முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் இருவரும் களமிறங்கினர். விறுவிறுப்பு நிறைந்த போட்டியில் முதல் செட்டை 6-4 என அல்காரஸ் கார்பியாவும், இரண்டாவது செட்டை 6-2 என ரூடும் கைப்பற்றினர்.

மூன்றாவது மற்றும் நான்காவது செட்களை 7-6, 6- 3 என 19 வயதான அல்காரஸ் கார்பியா கைப்பற்றினார். 

இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் முதல் முறையாக அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.மேலும் உலக டென்னிஸ் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் அல்காரஸ் முதலிடம் பிடித்துள்ளார்.

இதன் மூலம் மிக இள வயதில் நம்பர் – 1 இடத்தை எட்டிப் பிடித்து சாதனை படைத்துள்ளார்  அல்காரஸ் என்பது குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com