துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 3-வது தங்கம்!

துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 3-வது தங்கம்!

Published on

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 3-வதாக இன்று மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைக்கப் பெற்றது.

கொரியாவின் சாங்வான் நகரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டிகளில் 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் அர்ஜூன் பபுதா, சாஹு துஷார் மானே, பார்த் மஹிஜா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 17-15 கணக்கில் கொரியாவை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றது. இந்தத் தொடரில் இந்தியா வெல்லும் 3-வது தங்கப் பதக்கம் இதுவாகும்.

முன்னதாக இந்தியாவின் மெஹுலி கோஷ், ஷாஹு துஷார் மானே ஜோடி தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் மெஹுலி கோஷ், ஷாஹு துஷார் மானே ஆகிய இருவரும் இறுதி சுற்றில் ஹங்கேரியின் எஸ்டர் மெஸ்ஸாரோஸ், இஸ்ட்வான் பென் ஜோடியை 17-13 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

logo
Kalki Online
kalkionline.com