‘தம்பி’ பொம்மையுடன் அமைச்சர் செல்ஃபி!

‘தம்பி’ பொம்மையுடன் அமைச்சர் செல்ஃபி!

Published on

சென்னைக்கு அருகே மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி துவங்கவுள்ளது. இம்மாதம் 28-ம் தேதி முதல் ஆகஸ்டு 10 ம் தேதி வரை நடக்கவுள்ளன.இந்த சர்வதேச செஸ் போட்டித் தொடரில் 187 நாடுகளை சேர்ந்த 343 அணிகள் பங்கேற்க்கவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதில் 189 அணிகள் பொதுப் பிரிவு போட்டிகளிலும், 154 அணிகள் மகளிர் பிரிவிலும் கலந்து கொள்கின்றனர்

இந்த 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'தம்பி லோகோ' பொம்மைகள், தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டு வருகின்றனசென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள குதிரைமுக 'தம்பி' பொம்மை, பயணிகளை வெகுவாகக் கவர்ந்து, அதனுடன் பயணிகள் ஆர்வத்துடன் செல்பி எடுத்து செல்கின்றனர்.

இம்மாதம் 28-ம் தேதி துவங்கவுள்ள இந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவிற்கு பங்கேற்க்க வருமாறு பிரதமர் மோடியை நேரில் சென்று அழைப்பு விடுத்த தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், சென்னை விமான நிலையம் வந்ததும் அங்கிருந்த 'தம்பி' பொம்மையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

logo
Kalki Online
kalkionline.com