காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்; இன்று தொடக்கம்!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்; இன்று தொடக்கம்!

சர்வதேச அளவில் 72 நாடுகள்  கலந்து கொள்ளும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்று  இங்கிலாந்தில் பர்மிங்ஹாமில் தொடங்கப்பட உள்ளன. இந்த  தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய அணிக்கு பேட்மிண்டன் சாம்பியன் பி.வி.சிந்து தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏந்தி செல்கிறார்

இதுகுறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பாகத் தெரிவிக்கப் பட்டதாவது:

சர்வதேச அளவில் 72 நாடுகள் கலந்து கொள்ளும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்று  இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் நகரில் இந்திய நேரப்படி இன்றிரவு 11.30 மணிக்கு கோலாகலமாக தொடங்க உள்ளது.

இந்த முறை போட்டிகளில் இருந்து இந்திய வீரர்  நீரஜ் சோப்ரா விலகியதால் அவருக்கு பதிலாக  இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்வார்.இந்த அணிவகுப்பில் இந்திய 164 வீரர்,வீராங்கனைகள் பங்குபெறுவார்கள்.

இன்று தொடங்கப்படும் இந்த 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்  ஆகஸ்ட் 8-ம் தேதி  வரை நடைபெறவுள்ளது. இந்த முறை புதிதாக 20 ஓவர் பெண்கள் கிரிக்கெட், ஜூடோ ஆகிய போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளனதுப்பாக்கி சுடுதல் போட்டிகள் நீக்கப்பட்டுள்ளன

இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, இங்கிலாந்து, வங்காளதேசம், ஜமைக்கா, மலேசியா, நைஜீரியா, நியூசிலாந்து, உள்ளிட்ட 72 நாடுகளை சேர்ந்த 5000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

 இந்தியா 18-வது முறையாக இந்த போட்டியில் கால்பதிக்க உள்ளது. காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா இதுவரை 181 தங்கம் உட்பட 503 பதக்கங்கள் வென்று, காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. 

–இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com