உத்தரப் பிரதேச மாநிலத்தில் கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு வழங்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் வேதனை தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான மாநில அளவிலான கபடிப் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீராங்கனைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு வழங்கப்பட்டது தெரிய வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அம்மாநில அரசுக்கு கடும் கண்டனங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து, அந்த மாவட்ட விளையாட்டுத் துறை அதிகாரி அனிமேஷ் சக்சேனா இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இச்சம்பவத்துக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்ததாவது;
மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள வந்த கபடி வீராங்கனைககள் கழிவறையில் உணவு உண்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இவ்வாறு ஷிகர் தவான் குறிப்பிட்டுள்ளார்.