"இங்கிலாந்து அணியில் ஹாரி புரூக் இல்லாதது பின்னடைவுதான்" - கெவின் பீட்டர்சன்!

Kevin Pietersen!
Kevin Pietersen!

இந்தியாவுக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணியில் ஹாரி புரூக் இடம்பெறாதது அந்த அணிக்கு சற்று பின்னடைவுதான் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹதராபாதில், ராஜீவ்காந்தி சர்வதேச விளையாட்டரங்கில் வருகிற 25 ஆம் தேதி தொடங்குகிறது.

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புரூக், இங்கிலாந்து அணியில் இடம்பெறமுடியவில்லை. அவருக்கு பதில் யார் அணியில் சேர்க்க்ப்ப்ட்டுள்ளார் என்பது விரைவில் தெரிவிக்கப்படும்  என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

இதனிடையே முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன், எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இங்கிலாந்து அணியில் சிறந்த ஆட்டக்காரரான ஹாரி புரூக் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. மேலும் அது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக இருக்கும். பென்ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியில் புரூக் 12 போட்டிகளில் பங்கேற்று 1,181 ரன்கள் குவித்துள்ளார். இதில் நான்கு சதங்களும், 7 அரை சதங்களும் அடங்கும்.

குடும்ப விவகாரம் காரணமாக அவரால் இங்கிலாந்து அணியில் பங்கேற்க முடியவில்லை. மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றில் இங்கிலாந்துக்கு இது இரண்டாவது டெஸ்ட் தொடராகும். 2023 இல் ஆஸ்திரேலியாவுடன் நடந்த போட்டி 2-2 என டிராவில் முடிந்தது.

புரூக் குடும்பத்தினரின் தனிப்பட்ட காரணங்களுக்காக அவரால் இந்த தொடரில் விளையாட முடியவில்லை. குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்கா புரூக் விளையாட முடியாத நிலையில் ஊடகங்கள், பத்திரிகைகள் தேவையில்லாம் இந்த விவகாரத்தில் ஊடுருவ வேண்டாம் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
‘நீல மலைகள்’ என்றழைக்கப்படும் நீலகிரிக்கு மூன்று நாள் பயணம்!
Kevin Pietersen!

2016-17 ஆம் ஆண்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 0-4 என்ற கணக்கில் இந்தியா வென்றது. 2020-21 இல் இங்கிலாந்தை இந்தியா 1-3 என்ற கணக்கில் வென்றது. எனினும் 2012-13 இல் நடைபெற்ற போட்டியில் இந்தியாவை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றது.

இங்கிலாந்து அணி விவரம்: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரேஹன் அகமது, ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கின்சன், ஜானி பார்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), ஷோயிப் பஷீர், ஜக் கிராவ்லே, பென் டக்கெட், பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லே, ஜாக் லீச், ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், ஜோ ரூட் மற்றும் மார்க் உட்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com