உடல் சூட்டை குறைக்கும் கிர்ணி பழம்!

உடல் சூட்டை குறைக்கும் கிர்ணி பழம்!

கோடைகாலத்தில் உடலில் சூடு அதிகமாக இருக்கும். இதனால் வெயில் காலத்தில் எந்தெந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற சந்தேகங்கள் அதிகமாக இருக்கும்.

அந்த வகையில் உடல் சூட்டை தணிப்பதற்கு ஏற்ற பலமாக கிர்ணி பழம் பார்க்கப்படுகிறது. மேலும் கிரிணி பழத்தில் வைட்டமின் ஈ, பி, சி, பீட்டா, கரோட்டின்கள, பொட்டாசியம், மேக்னீஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

இது உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் மருந்தாக அமைகிறது. இதனால் கிரிணி பழத்தில் உள்ள மருத்துவ குறிப்புகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

சருமம் சார்ந்த பிரச்சினை உள்ளவர்கள் இப்பழத்தை அவ்வபோது சாப்பிட்டு வந்தால் ஊட்டச்சத்துக்கள் சரும பிரச்சனைகளை சரி செய்யும். பார்வை குறைபாடு பிரச்சனை இருப்பவர்களுக்கு இப்பழம் சிறந்தது. புகையிலை பொருட்களால் ஏற்படும் நுரையீரல் பிரச்சனைகளை இப்பழம் மெதுவாக சரி செய்யும் என சொல்லப்படுகிறது. கிர்ணி பழத்தை சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

இவற்றால் எந்த பிரச்சனையும் ஏற்படாது. வயிற்று கோளாறுகளுக்கு இயற்கை மருந்தாக கிர்ணி பழம் அமைகிறது.

இதில் இருக்கும் நார் சத்துக்கள் வயிற்றுப் பிரச்சனைகளை சரி செய்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com