

19வது ஐபிஎஸ் திருவிழா இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வரும் நிலையில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் லக்னோ 4 ஆட்டத்திலும், கொல்கத்தா 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் போடப்பட்டதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்களை குவித்தது.
பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய லக்னோ அணி கடுமையாக போராடி இறுதியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.