
பப்பாளி என்றால் உடல்சூடு தரும், கர்ப்பிணிகளுக்கு நல்லதல்ல என பல காரணங்கள் சொல்லி அதை சாப்பிடாமல் இருந்தனர்.ஆனால் தற்போது அதன் பயன் தெரிந்து அனைவருக்கும் ஏற்றது என பப்பாளி யை விரும்பி சாப்பிடும் நிலை வந்துள்ளது.
பப்பாளியில் காயும் , பழமும் பயன் தருவது போல அதன் இலையும் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது என அறியப்படுகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு , பப்பாளி இலைச் சாற்றை மூன்று வேளை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு கொடுக்க நல்ல முன்னேற்றம் கொடுத்தது.அதிலிருந்து பப்பாளி இலைச் சாறும் பெரிதும் பயன்படுகிறது.
பப்பாளி சத்து மிகுந்தது. இதன் இலை முதல் காயிலிருந்து வரும் பால் முதற் கொண்டு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.இதில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது .இதனால் கண்களுக்கு பார்வைத் தெளிவாக்கும்,அதன் பாதுகாப்புக்கும் உதவியாய் இருக்கிறது. சிவப்பு நிறம் தரும் பீட்டா கரோட்டின் , மற்றும் வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்துள்ளன.
பப்பாளி மாமிச உணவை விரைவாக சமைக்க பயன்படுகிறது.இதில் மக்னீசியம், பொட்டாசியம்,செம்பு, இரும்பு, கால்சியம், போன்ற பல ஊட்டச்சத்து கள் உள்ளன.இதனால் பப்பாளி சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும் வகையில் பலனளிக்கிறது.
மூட்டு வலிபிரச்சனையையும், உடல் எடையை குறைக்க வல்லது மாகபுற்றுநோய் வராமல் தடுக்க ,தோல் நோய்களை தீர்ப்பது என பப்பாளி யை அதன் பல நலன்களுக்காக எடுத்துக் கொள்ள ஆரோக்யமாக நம்மை வைத்துக்கொள்ளலாம்.
பப்பாளி யில் கலோரிகள் குறைவாக உள்ளது. தமனி அடைப்பு வராமல் தடுக்கிறது .
உடல் பருமனைக் குறைக்கவல்லது.பப்பாளியில் உள்ள வைட்டமின் கே மூட்டு அழற்சியை குறைக்க உதவுகிறது. சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்கிறது.
தோல் சுருக்கம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.வயதாவதை தள்ளி போக செய்து முக சுருக்கம் , தோல்வறட்சியைப் போக்குகிறது.
பப்பாளி யை விரும்பி உண்ணும் போது பல பிரச்சனைகளுக்கு தீர்வு தந்து ஆரோக்யமாக நம்மை வைக்கிறது .