சென்னை ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்றார் லிண்டா

சென்னை ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்றார் லிண்டா

Published on

சென்னையில் நேற்று நடைபெற்ற  டென்னிஸ் போட்டியில் செக் குடியரசு வீராங்கனை லிண்டா வெற்றி பெற்றார்.

சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ஒற்றையர் இறுதிப்போட்டியில் 17 வயதான செக் குடியரசு வீராங்கனை லிண்டா புருவிர்தோவா, போலந்தின் மேக்டா லினெட்டுடன் நேருக்குநேர் மோதியதில் லிண்டா வெற்றி பெற்றார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மேக்டா லினெட்டுவை 6-4, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி லின்டா புருவிர்தோவா சாம்பியன் பட்டம் வென்றார்.

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனை லிண்டாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேடயம் வழங்கி கவுரவித்தார்.

ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற லிண்டாவுக்கு கேடயம் மற்றும் ரூ.26.44 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

இரண்டாம் இடம் பிடித்த போலந்து வீராங்கனை மேக்டா லினெட்டுக்கு கேடயம் மற்றும் ரூ.15.73 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

logo
Kalki Online
kalkionline.com