
பிரபல கால்பந்து வீரர் லயனல் மெஸ்ஸி 8-வது முறையாக பாலன் டீ ஆர் விருதை வென்றுள்ளார். எனினும் கால்பந்து ஆட்டத்தில் நீண்டகாலம் தொடர்வது பற்றி தாம் சிந்திக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். கால்பந்து ஆடுவது குறித்து தினசரி அடிப்படையில் முடிவு செய்வதாகவும் அவர் கூறினார். கால்பந்தை ரசிக்கும் வரை தொடர்ந்து ஆடிக்கொண்டிருப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
36 வயதில், மெஸ்ஸி மான்செஸ்டர் சிட்டியின் எர்லிங் ஹொலாந்தை தோற்கடித்தார். கடந்த ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆர்ஜென்டினா கோப்பை வென்றதில் மெஸ்ஸி முக்கியபங்காற்றினார். அந்த போட்டியில் நடப்பு சாம்பியனாக இருந்த பிரான்ஸை ஆர்ஜென்டினா வென்றது. மெஸ்ஸி கத்தாரில் மாயாஜால பிரசாரம் செய்தார். அவர், தமது அணியை முன்னின்று வழிநடத்தினார். பல்வேறு மனவேதனைகளை எதிர்கொண்ட அவர், கோபா அமெரிக்கா மற்றும் உலக கோப்பை போட்டியை நிறைவு செய்தார்.
திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மெஸ்ஸி, மனநிறைவுடன் பலான் டீ ஆர் விருதை பெற்றுக்கொண்டார். உலக சாம்பியானாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பரிசு எனக்கு மகிழ்ச்சியையும் அமைதியையும் அளித்துள்ளது என்று மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
பி.எஸ்.ஜி.யுடன் இருந்தபோது பார்சிலோனாவில் வெற்றியை அவரால் பெறமுடியவில்லை என்றாலும் பாலன் டீ ஆர் விருதை வென்றுள்ளார். பிஎஸ்ஜி யிலிருந்து வெளியேறிய அவர் இப்போது இன்டர் மியாமியுடன் புதிய ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளார். இன்டர் மியாமியில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வித்தியாசமான வாழ்க்கையை நான் இங்கு உணர்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2026 உலக் கோப்பை கால்பந்து குறித்து உங்கள் கருத்து என்ன என்ற கேட்டதற்கு பதிலளிக்க மெஸ்ஸி மறுத்துவிட்டார். நான் அதுபற்றி இப்போது நினைக்கவில்லை. தினசரி அடிப்படையில் நான் கால்பந்து விளையாட்டை ரசித்து வருகிறேன் என்றார் ஆர்ஜென்டினா நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி.
2026 உலக கோப்பை கால்பந்து போட்டி நடக்கும்போது மெஸ்ஸிக்கு 39 வயதாகிவிடும். இந்த போட்டியை அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் கனடா இணைந்து நடத்துகிறது.
2022 உலக கோப்பை போட்டிகள் கத்தாரில் நடைபெற்றபோது இதுதான் நான் கலந்து கொள்ளும் கடைசி உலக கோப்பை போட்டியாகும் என்று மெஸ்ஸி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எத்தனை நாள் நான் கால்பந்து விளையாடுவேன் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், கால்பந்தை ரசிக்கும் வரை நான் தொடர்ந்து விளையாடுவேன். உடல் தகுதி நன்றாக இருக்கும் வரை விளையாடுவேன் என நினைக்கிறேன். இதற்கு காலக்கெடு எதையும் நான் கூறமுடியாது என்றார் மெஸ்ஸி.