ஐபிஎல் 2026: சிஎஸ்கேவை வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அதிரடி வெற்றி..!

லக்னோவில் இன்று நடைபெற்ற 59-வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி வாகை சூடியது.
LSG vs CSK
LSG vs CSKimage credit-indiatvnews.com
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

லக்னோவில் இன்று நடைபெறும் 59-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுடன் மோதுகிறது.

சென்னை அணி 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் இருக்கிறது.

லக்னோ அணி 11 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 8 தோல்வி கண்டு பிளே- ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்டதுடன், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் பரிதவிக்கிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 3 வெற்றி பெற்று சமநிலை வகிக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

சென்னை அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இனிவரும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டியது கட்டாயம்.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் லக்னோ அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்களை குவித்தது.

அதனை தொடர்ந்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய லக்னோ அணி அதிரடியாக விளையாடி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

logo
Kalki Online
kalkionline.com