#BREAKING IPL 2026: பந்துவீச்சில் மிரட்டி, பேட்டிங்கில் அதிரடி காட்டிய குஜராத்: லக்னோ அணி வீழ்ந்தது..!!

அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்தி குஜராத் 3-வது வெற்றியை பதிவு செய்தது...
LSG vs GT
LSG vs GTimage credit-indianexpress.com
Published on

19-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் மாலை லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

நடப்பு ஐபில் தொடரில் இந்த இரு அணிகளும் விளையாடிய கடைசி 5 போட்டியில் லக்னோ அணி 3 போட்டியிலும், குஜராத் அணி 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் போடப்பட்டதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் கில் பந்துவீச்சு தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்களை குவித்தது.

அதனை தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய குஜராத் அணி, ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி இறுதியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் குஜராத் 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com