மகளிர் டி-20 முதல் போட்டியே இந்தியாவுக்கு சறுக்கல்!

Women's T20.
Women's T20.
Published on

மகளிர் டி-20 போட்டியில் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிரை வென்றது. முதல் போட்டியே இந்திய அணிக்கு சறுக்கலாக அமைந்துவிட்டது.

மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இந்தியா தோல்வியை தழுவியதை அடுத்து இங்கிலாந்து 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.

இங்கிலாந்து பேட்டிங்கில் டேனி வியாட், நேட் ஸ்கீவர் அதிரடியாக விளையாடினர். பந்துவீச்சில் சோஃபி எக்லஸ்டன் அசத்தினார்.

இந்திய பேட்டிங்கில் ஷஃபாலி வர்மாவும், பந்துவீச்சில் ரேணுகா சிங் இருவரும் தங்கள் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினர். இங்கிலாந்தின் நேட் ஸ்கீவர் பிரன்ட் ஆட்டநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய அணியில் சைகா இஷாக், ஸ்ரேயங்கா பாடீல் இருவரும் புதுமுகமாக களம் இறங்கினர். மகளிர் போட்டியில் முதன் முறையாக டி.ஆர்.எஸ். முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இங்கிலாந்து அணியில் நேட் ஸ்கீவர் 53 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் குவித்தார். டேனி வியாட் 47 பந்துகளில் 75 ரன்கள் விளாசினார்.

இந்திய தரப்பில் ரேணுகா சிங் 3, ஸ்ரேயங்கா பாடீல் 2, சாய்கா இஷாக் 1 விக்கெட்டை வீழ்த்தினார். பேட்டிங்கில் ஷஃபாலி வர்மா 42 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஹர்மன் ப்ரீத் கெளர் 26, ரிச்சா கோஷ் 21 ரன்களும் எடுத்தனர். ஸ்மிருதி மந்தனா, ஜெமீமா, கனிகா எதிர்பார்த்த அளவு விளையாடவில்லை.

இங்கிலாந்து பந்து வீச்சாளர்களில் சோஃபி எக்லஸ்டன் 3, நேட் ஸ்கீவர், ஃபெரைரா கெம்ப், சாரா கிளென் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com