மல்லிகை பூவின் மருத்துவ குணங்கள்

மல்லிகை பூவின் மருத்துவ குணங்கள்
Published on

பூவை கொதிக்க வைத்து தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து குடித்துவர சிறுநீரகப் பிரச்னை, வயிற்று கோளாறுகளை சரிசெய்ய உதவும். அஜீரணப் பிரச்னைகள் இருக்காது. வயிற்றில் புழுக்கள் இருந்தாலும் அதை அழித்திவிடும்.

மல்லிகைப் பூவை நிழலில் காய வைத்து அதை பொடியாக்கி வெந்நீரில் கலந்து குடித்தால் சிறுநீரகக் கல் கரையும்.

நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் மல்லிகைப் பூவை காய வைத்து பொடியாக்கி தேனில் குழைத்து இரு ஸ்பூன் சாப்பிட குணமாகும்.

பெண்களுக்கு கருப்பைப் பிரச்னைகள், கருப்பை வலுபெறவும் மல்லிகைப் பொடியை தேனில் குழைத்து சாப்பிடலாம். மாதவிடாய் சீராக வருவதற்கும் மல்லிகைப் பூ உதவும்.

பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் கட்டிக்கொண்டால் மல்லிகைப் பூவை அரைத்து அதை மார்பகங்களில் பத்து போட்டால் உடனே பால் கரைந்து வெளியேறிவிடும்.

மல்லிகைப்பூக்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எலும்புருக்கி நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்கள் பாதிப்பு குறையுமாம்.

மல்லிகைப் பூக்களைக் கொண்டு எடுக்கப்படும் எண்ணெயானது கர்ப்பப்பைக்கு வலுவூட்டி பிரசவத்தின் போது உண்டாகும் வலியை குறைத்து சுகப்பிரசவத்திற்கு உதவுகிறது.

தலையில் நீர் கோர்த்தல் ஒற்றைத்தலைவலி போன்ற பிரச்சனைகள் கொண்டிருப்பவர்கள் மல்லிகை எண்ணெயை இருப்பில் வைத்துக்கொண்டு வலி இருக்கும் போது தடவி வந்தால் வலி அதிகரிக்காமல் தடுக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com