கிவிப்பழத்தின் மருத்துவ குணங்கள்!

கிவிப்பழத்தின் மருத்துவ குணங்கள்!
Published on

சீனா வின் தேசிய ப்பழமான கிவிப்பழத்தின் நன்மைகள் பலவற்றையும் சொல்லலாம்.பல வைட்டமின்கள், தாது உப்புக்கள், மற்றும் கார்போஹைட்ரேட், நீர்ச்சத்து எனபல அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

வைட்டமின் ஏ,சி,கே,புரதம், கார்போஹைட்ரேட், நீர்ச்சத்து எனநமக்கு அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்த முழுமையான பழம் கிவி இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது . உடல் பருமனைக் குறைக்கும் .

ப்ரீரேடிக்கல்ஸ் ஐ அழித்து நோய் எதிர்ப்புச் சக்தியைக் அதிகரிக்கும்.ஆரஞ்சு பழத்தைப் போல இதிலும் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. முதுமைக்கால கண்நோய், தோல் நோய்களைப் போக்கும்.

ஆஸ்துமா நோயாளிகளுக்கு சுவாச கோளாறுகளை நீக்கி,சுகம் தருகி றது. இதிலுள்ள வைட்டமின் ஈ சத்து சருமம் இளமைப் பொலிவுடன் இருக்கவும்,கருவுறுதலுக்கான வாய்ப்பை யும்அதிகரிக்கிறது.

ஃபோலிக் மற்றும் ஒமேகா3 கொழுப்பு அமிலம் இதில் நிறைவாக இருப்பதால் குழந்தைகளின் மூளை செல்களின் வளர்ச்சியைத் தூண்டும்.ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

இதில் பொட்டாசியம் தாது உப்புக்கள் அதிகமாக உள்ளது.இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் பாலிஃபீனால் இதயதசை மற்றும் ரத்தகுழாய்களைப் பாதுகாத்து மாரடைப்பு வராமல் தடுக்க உதவும்.

நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலச்சிக்கலை நீக்கும். கொலஸ்ட்ராலை குறைக்க வல்லது. சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com