சுரைக்காயின் மருத்துவ குணங்களை பார்க்கலாம்!

சுரைக்காயின் மருத்துவ குணங்களை பார்க்கலாம்!
Published on

சுரைக்காயில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ்,இரும்புச் சத்து, வைட்டமின் B ஆகியவை உள்ளன. மேலும் இதில் அதிக ஈரப்பதமும், குறைந்த அளவில் புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து மற்றும் கார்போஹைடிரேடும் உள்ளன.

சுரைக்காயின் சதைப் பகுதியை வெட்டி ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை ப்ழச்சார்றை சேர்த்து பருகி வர சிறுநீரக கோளாறு, சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு ஆகிய பிரச்சனைகள் தீரும் .

மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்துவ உணவாக இருக்கிறது.

ஒரு கப் பச்சை சுரைக்காய் ரசத்தில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு அருந்தினால் நாவறட்சி நீங்கும். உப்பு போடாமல் இந்த ரசத்தை அருந்தக்கூடாது.

சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து உண்டு வந்தால் பித்தம் விரைவிலேயே சமநிலைப்படும்.

தற்காலங்களில் பலரும் கம்ப்யூட்டர் சம்பந்தமான பணிகளில் இருப்பதால் கண் எரிச்சல், கண் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் இத்தகைய கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.

சுரைக்காய் பக்குவம் செய்து சாப்பிடுவதால் உடல் சூடு குறையும், வெயில் காலத்தில் வெப்ப நோய்கள் தாக்காமல் காப்பதோடு நமது தோலுக்கு மினுமினுப்பையும் கொடுக்கும்.

சுரைக்காய் சாற்றில் சிறிது நல்லெண்ணெய் கலந்து பருகி வர இரவில் உறக்கமின்மை வியாதி நீங்கி நல்ல ஆழ்ந்த உறக்கம் ஏற்படும்.

ஒரு துண்டு சுரைக்காய், விதை நீக்கிய ஒரு நெல்லிக்காய் இவற்றை நீர்விட்டு அரைத்து சாறு பிழிந்து, வாரம் இருமுறை காலையில் வெறும் வயிற்றில் பருகி வந்தால் உயர் இரத்த அழுத்தம் விரைவில் கட்டுப்பாட்டிற்குள் வரும்.

சிலருக்கு முகத்தில் உள்ள எண்ணெய் வழிந்து காணப்படும். எத்தனை முறை சோப்பு போட்டு கழுவினாலும் மீண்டும் எண்ணெய் வழியும். அப்படிப்பட்டவர்கள் சுரைக்காய் சாறுடன் சிறிது இந்துப்பு சேர்த்து குடித்து வர எண்ணெய் வழிவது குறைந்து முகம் பொலிவுடன் காணப்படும்.

சுரைக்காய் நார்ச்சத்து அதிகம் கொண்டது. தினமும் ஒரு வேளை சுரைக்காய் சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் ஆறும். வயிற்றில் ஏற்படும் பாதிப்புகள், மலச்சிக்கல் போன்றவை தீரும்.

பெரிய வயிறு உள்ளவர்கள், குரலைக் காக்க வேண்டிய பாடகர்கள் யாவரும் சுரைக்காய் உணவில் தவிர்க்க வேண்டும்.

அது போல பெண்களின் மாதவிலக்கின் போது சுரைக்காயை உணவில் தவிர்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com