#BREAKING சிஎஸ்கே vs மும்பை: அனல் பறந்த ஆட்டம்; சென்னை அணியின் அபார பந்துவீச்சால் வீழ்ந்த மும்பை..!

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணி மும்பையை வீழ்த்து தனது 3-வது வெற்றியை பதிவு செய்தது.
CSK Team
CSK TeamImage credit-outlookindia.com
Updated on

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் 33-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

நடப்பு ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 6 போட்டிகளில் விளையாடியதில் 2-ல் வெற்றி பெற்றது. சென்னை அணி 6 போட்டிகளில் விளையாடியதில் 2-ல் வெற்றி கண்டது.

ஐபிஎல் வரலாற்றில் சென்னை, மும்பை அணிகள் மோதினாலே எப்போதும் எதிர்பார்ப்பு எகிறும். அதனால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 39 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 21-ல் மும்பையும், 18-ல் சென்னையும் வென்று இருக்கின்றன. வான்கடே மைதானத்தில் இவ்விரு அணிகளும் 13 முறை சந்தித்ததில் மும்பை 8-5 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்ய, அதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்களை குவித்தது.

மெகா இலக்கான 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய மும்பை அணி அதிரடியாக விளையாடினாலும் சென்னை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 103 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com