

2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 24வது லீக் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இவ்விரு அணிகளும் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் மும்பை அணி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆனால் பஞ்சாப் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக வலம் வருகிறது.
இவ்விரு அணிகளும் இதுவரை 34 முறை நேருக்குநேர் மோதியதில் தலா 17 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன.
சரிவில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்ப மும்பை அணியும், ஆதிக்கத்தை தொடர பஞ்சாப் அணியும் வரிந்து கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இன்றைய போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, இதையடுத்து, பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்களை குவித்தது.
196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி இறுதியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.