MI Vs PBKS: மும்பை அணியின் மூன்றாவது வெற்றி… பஞ்சாப் அணி போராடி தோல்வி!

Team Mumbai
Team Mumbai

நேற்று பஞ்சாப்பில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையேயான போட்டியில், மும்பை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்க்ஸ் அணியின் கேப்டன் சாம் கரண் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். பேட்டிங்கில் களமிறங்கிய மும்பை அணியிலிருந்து இஷான் கிஷன் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் ஓப்பனராகக் களமிறங்கினார்கள். இஷான் கிஷன் 8 ரன்களில் ரபாடா பந்தில் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோர் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ரோஹித் ஷர்மா 36 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 78 ரன்களும் எடுத்து வெளியேறினார்கள். திலக் வர்மா, தனது அதிரடி ஆட்டத்தால் 18 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து வெளியேறினார். அந்தவகையில், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பிறகு களமிறங்கிய பஞ்சாப் அணி 193 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது. மும்பை அணி பவுலர்கள் பும்ரா மற்றும் கோட்ஸியின் பந்துகளில் பஞ்சாப் அணி பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள். பஞ்சாப் அணியில் முதலில் களமிறங்கிய நான்கு பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினார்கள். அதாவது, கேப்டன் சாம் கரண் 6 ரன்களும், ரிலீ ரோசோவ் 1 ரன்னும், லியாம் 1 ரன்னும் எடுத்து வெளியேறினார்கள்.  அதேபோல் பிரப்சிம்ரன் சிங் டக் அவுட்டானார். ஆட்டம் மும்பை அணி பக்கம் திரும்புகிறது என்று எண்ணிய நேரத்தில், பஞ்சாப் அணியில் ஷஷாங்க் சிங் மற்றும் அசுதோஷ் சர்மா, போட்டியை பஞ்சாப் அணி பக்கம் திருப்பினார்கள்.

இதையும் படியுங்கள்:
DC Vs GT: குஜராத் அணியின் குறைந்த இலக்கு… 9 ஓவர்களிலேயே ஆட்டத்தை முடித்த டெல்லி அணி!
Team Mumbai

ஷஷாங்க் 25 பந்துகளில் 41 ரன்களும், அசுதோஷ் 28 பந்துகளில் 61 ரன்களும் எடுத்து வெளியேறினார்கள். பஞ்சாப் அணி வெற்றியை நோக்கி நகர்கையில், மும்பை அணியின் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை எடுத்தார்கள். இதனால், பஞ்சாப் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், மும்பை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று ஆட்டத்தை கைப்பற்றியது.

மும்பை அணி, 7 போட்டிகளில்  3 போட்டிகள் வென்று புள்ளிப்பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது. அதேபோல், பஞ்சாப் அணி 7 போட்டிகளில் 2 போட்டிகள் வென்று 9 வது இடத்தில் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com