#BREAKING : ஐபிஎல் 2026: மும்பையை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி..!

வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி, பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Royal Challengers Bengaluru
Royal Challengers Bengaluru
Updated on

19-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இன்று இரவு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 3 ஆட்டங்களில், பெங்களூரு அணி 2 வெற்றிகளையும், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸில் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய பெங்களுரு அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ரன்களை குவித்தது.

மெகா இலக்கான 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி, எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் கடுமையாக போராடி இறுதியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com