இந்திய கிரிக்கெட் வீரர்கள் முழு திறமையும் வெளிப்படுத்தவில்லை: மைக்கேல் வாகன் விமர்சனம்!

Michael Vaughan
Michael Vaughan

ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இந்திய கிரிக்கெட் அணி பற்றிய தமது கருத்துக்களால் கிரிக்கெட் உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இந்திய அணி, திறமையுள்ள அணியாக இருந்தாலும் சர்வதேச போட்டிகளில் முழு திறமையையும் வெளிப்படுத்துவதில்லை என்று கூறியுள்ளார்.

இந்திய அணியின் பேட்ஸ்மென்கள் மற்றும் பந்துவீச்சாளர்களிடம் ஏராளமான திறமைகள் இருக்கின்றன. ஆனால், அவர்கள் முழு திறமையையும் வெளிப்படுத்தி ஆடாத்தால்தான் சர்வதே அரங்கில் கோப்பைகளை வெல்லமுடியாமல் போகிறது என்கிறார் மைக்கேல் வாகன்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (பாக்ஸிங் டே போட்டி) இந்தியா சரிவர விளையாடாமல் தோல்வி அடைந்த்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேபோல உலக கோப்பை போட்டியில் 10 ஆட்டங்களில் வென்ற இந்திய அணிக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இறுதிப்போட்டியில் இந்தியா நூலிழையில் தோற்றது. இதற்கும் திறமைகளை சரிவர பயன்படுத்தி ஆடாததுதான் என்பது வாகனில் கருத்தாகும்.

வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளிலும் இந்திய அணி, வெற்றியை தவறவிட்டதற்கு இதுவே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார். 2013 ஆம் ஆண்டி எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி ஐ.சி.சி. போட்டிகளில் டிராபி வென்றது. ஆனால், அதன் பிறகு நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி அரையிறுதியை எட்டியபோதிலும் இறுதிப்போட்டியில் வெற்றியை கைநழுவவிட்டது. 2021 மற்றும் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் இதே நிலைதான் என்றும் மைக்கேல் வாகன் கூறினார்.

ஃபாக்ஸ் ஸ்போர்ட் குழு விவாத்ததிலும் வாகன் வெளிப்படையாகவே இந்தியாவின் சாதனைகளை கடுமையாக விமர்சித்தார். முன்னாள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென் மார்க் வாஹ் இடம், “கிரிக்கெட் விளையாட்டில் இந்திய அணி முழு திறமையை வெளிப்படுத்தி ஆடவில்லை என்று நீங்கள் கருதுகிறீர்களா? என்று கேட்டுள்ளதுடன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் தொடரில் வென்ற இந்திய அணி, உலக்க் கோப்பை மற்றும் டி 20 உலக கோப்பை போட்டிகளில் சரிவர ஆடவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா திறமையை வெளிப்படுத்தி இருந்தாலும் ஆஸ்திரேலியாவில் தொடை வென்றாலும், வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டியில் இந்திய அணியின் நிலை கவலை அளிக்கிறது. பேட்டிங் மற்றும பந்துவீச்சு ஆகிய இரண்டில் திறமையான இந்திய அணி, சமீபத்திய ஆண்டுகளில் சாதித்தைவிட அதிகம் சாதித்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் முழுத்திறமையையும் வெளிப்படுத்தாமல் ஆடியதால்தான் தோல்வியைத் தழுவி வருகின்றனர் என்று மைக்கேல் வாகன் நம்புகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com