உலக கோப்பை தோல்வியை அடுத்து பிரதமர் மோடி கூறியதை முகமது ஷமி பகிர்ந்துள்ளார்!

'உலகக் கோப்பை கிரிக்கெட் தோல்விக்குப் பின் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அணியினருக்கு நேரில் ஆறுதல் கூறியது நம்பிக்கை அளிக்கிறது' முகமது ஷமி.
PM Narendra Modi - Mohammed Shami
PM Narendra Modi - Mohammed Shami
Published on

உலகக் கோப்பை கிரிக்கெட் தோல்விக்குப் பின் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அணியினருக்கு நேரில் ஆறுதல் கூறியது நம்பிக்கை அளிக்கிறது என்கிறார் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி.

ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரின் இறுதியாட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது.

இது தொடர்பாக முகமது ஷமி, ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், தொடர்ந்து லீக் போட்டிகளில் வெற்றியைக் குவித்த இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வியுற்று கோப்பையை இழந்த நிலையில் சோகத்துடன் இருந்தனர். அந்த நேரத்தில் வீரர்கள் தங்கியிருந்த அறைக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து ஒவ்வொரு வீரரையும் தனித்தனியே சந்தித்து ஆறுதல் கூறியது நம்பிக்கை அளிப்பதாக இருந்தது.

வெற்றி கைநழுவிப் போனதால் மனம் உடைந்திருக்கும் நிலையில் இதுபோன்ற ஆறுதல்கள் தேவைதான். பிரதமர் மோடி நேரில் ஆறுதல் கூறி எங்களை ஊக்கப்படுத்தியது எங்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

எப்போதும் சமூக வலைத்தளங்கள் மூலம் இந்திய அணியை வாழ்த்தும் பிரதமர் நரேந்திர மோடி இந்த முறை நேரில் ஆறுதல் கூறியது வித்தியாசமாக இருந்தது. என்றார் முகமது ஷமி.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் ஆஸ்திரேலியா கோப்பை வென்றதற்காக வாழ்த்துச் சொன்ன பிரதமர் மோடி, “இந்திய அணி வீரர்களே, உலகக் கோப்பை போட்டித் தொடரில் உங்களின் திறமையும் மன உறுதியும் பாராட்டத்தக்கது. நீங்கள் இந்த தொடரில் சிறப்பாக விளையாடி தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். வெற்றியும் தோல்வியும் சகஜம்தான். நாங்கள் எப்போதும் உங்கள் பக்கம் இருக்கிறோம்” என்று கூறியிருந்தார்.

இதையும் படியுங்கள்:
முக்கிய முடிவை ரோஹித், கோலியை எடுக்க சொல்லிய பிசிசிஐ!
PM Narendra Modi - Mohammed Shami

உலகக் கோப்பை போட்டி தோல்விக்குப் பின் பேட்டியளித்த இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட், இந்த தொடரில் இந்தியா சிறப்பாகவே விளையாடியது. ஆனால், இறுதிப் போட்டியில் ஏனோ தோல்வி அடைந்துவிட்டது. நாளை சூரியன் உதிக்கும். மீண்டும் இந்திய அணி வலுவாக எழுச்சி பெறும்” என்று கூறியிருந்தார்.

முகமது ஷமி கூறுகையில், இந்தியாவுக்கு துரதிருஷ்டமான நாள். இந்திய அணி வீரர்கள் எந்த விதத்திலும் திறமை குறைந்தவர்கள் அல்ல. துரதிருஷ்டம் என்பது எப்போது வேண்டுமானாலும் வரலாம். அது நம் கையில் இல்லை. நாங்கள் சரியாக விளையாடாமல் இருந்திருக்கலாம். ஆனால், எதிரணியை பார்த்து பயந்துவிடவில்லை. துணிச்சலுடன்தான் செயல்பட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com