ஐபிஎல் 2024: மீண்டும் ‘தல’ எம்.எஸ்.தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஐபிஎல் 2024: மீண்டும் ‘தல’ எம்.எஸ்.தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ்!

.பி.எல். 2024 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு மீண்டும் தல தோனியே தலைமையேற்பது உறுதியாகிவிட்டது.

முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாகவும், இந்த ஆண்டு  அதிக அளவு பயிற்சியில் ஈடுபடாத காரணத்தினாலும் வரும் ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங் அணிக்கு இந்திய அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.தோனி தலைமை ஏற்பாரா என்பது கேள்விக்குறியாக இருந்தது.

இந்த நிலையில் ஐ.பி.எஸ். 2024 கிரிக்கெட் போட்டி சீசனில் விளையாடும் முக்கிய வீர்ர்களின் பட்டியலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. அதில் “தல” எம்.எஸ்.தோனி உள்ளிட்ட 8 வீர்ர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு அணியும் தக்கவைக்கும் வீர்ர்கள் பட்டியலையும், வெளியேறும் வீர்ர்களின் பட்டியலையும் நவம்பர் 26-க்கும் வெளியிட கெடு தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்த்து. இதைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் வீர்ர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் ஐந்து முறை அணிக்கு பட்டம் வென்று கொடுத்த எம்.எஸ்.தோனி பெயர் இடம்பெற்றுள்ளது.

கடந்த 2023 சீசனின் போது முழங்காலில் காயமடைந்திருந்த எம்.எஸ்.தோனி, அந்த காயங்களைப் பொருட்படுத்தாமல்  போட்டியில் விளையாடினார்.

2023 ஐ.பி.எல். போட்டி வெற்றிக்குப் பிறகு அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ரசிகர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு ஓய்வுபெறுவது எனக்கு எளிதானது. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் என்மீது மிகுந்த அன்பு வைத்திருக்கின்றனர். எனவே நான் மேலும் ஒரு சீசன் கிரிக்கெட் விளையாட தீர்மானித்துள்ளேன் என்று தோனி கூறியிருந்தார்.

கடந்த ஐ.பி.எல். சீசன் முடிவுக்குப் பின் முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற்றார். மும்பை கோகிலா பென் திரூபாய் அம்பானி மருத்துவமனையில் அவருக்கு வெற்றிகரமாக அறுவைச்சிகிச்சை நடந்தது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பயிற்சியாளருமான அனில் கும்பளே ஒரு பேட்டியில் எம்.எஸ்.தோனி, முழுங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அவர் ஓய்வில் இருக்கிறார். மேலும் அவர் முறையான பயிற்சி ஏதும் மேற்கொள்ளவில்லை. 2024 ஐ.பி.எல். சீசனில் அவர் விளையாடுவரா என்று தெரியவில்லை. ஐ.பி.எல். சீசன் தொடங்குவதற்கு அவர் தகுதி பெற்றுவிட்டால் ரசிகர்களை மகிழ்விக்க அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவார் என்றும் கூறியிருந்தார்.

இதனிடையே இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்கலாம் என்று பேசப்பட்டு வந்தது. ஆனால், பென் ஸ்டோக்ஸ் வெளியேறிவிட்டதால், இப்போது எம்.எஸ்.தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவது உறுதியாகிவிட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீர்ர்கள்: ருதுராஜ் கெய்க்வேட், தேவன் கான்வே, மொயீன் அலி, சிவம்துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), அஜின்கியா ரஹானே, தீபக் சாஹர், மகேஷ் தீக்ஷணா, முகேஷ் செளதுரி, மிட்செல் சான்ட்னர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், சிம்ரஞ்சீத் சிங், மதீஷா பதிரானா, துஷார் தேஷ்பாண்டே, பிரசாந்த் சோலங்கி, ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து மற்றும் அஜய் மண்டல்.

அணியிலிருந்து வெளியேரும் வீர்ர்கள்: பென் ஸ்டோக்ஸ், திவானி பிரிடோரியஸ், பாகத் வர்மா, சுப்ரன்ஷு சேனாதிபதி, அம்பாதி ராயுடு (ஓய்வு), ஆகாஷ் சிங், கீல் ஜமீசன் மற்றும் சிசாந்த மகலா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com