டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன்!

டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன்!

மும்பை, பிரபோர்ன் மைதானத்தில் நேற்று, மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் பலப்பரீட்சை நடத்தின.

டாஸை வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. டெல்லி அணி சார்பாக ஷெஃபாலி வர்மா, மேக் லானிங் இருவரும் களமிறங்கினர்.

ஆட்டத்தை விறுவிறுப்பாக கொண்டுபோக வேண்டுமென்ற எண்ணம் இருவரிடமும் துவக்கம் முதலே காணப்பட்டாலும், துரதிருஷ்டவசமாக ஷெஃபாலி வர்மா 4 பந்துகளில் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 11 ரன்கள் எடுத்தநிலையில், அவுட்டானார்.

அதைத்தொடர்ந்து, அலைஸ் கேப்சி இரண்டு பந்துகள் மட்டுமே சந்தித்த நிலையல், டக் அவுட் ஆகி வெளியேறினார். இருந்தும் அடுத்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிகஸ் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி ஏமாற்றத்தை அளித்தார்.

அடுத்தடுத்து டெல்லி அணியின் வீரர்கள் யாரும் சரியாக சோபிக்கவில்லை.

இருந்தாலும், மெக் லேனிங் 29 பந்துகளில் 35 ரன்களையும், மரிசேன் காப் 21 பந்துகளில் 18 ரன்களையும், ஷிகா பாண்டே 17 ரன்களில் 27 ரன்களையும், ராதா யாதவ் 12 பந்துகளில் 27 ரன்களையும் எடுத்தனர்.

இந்நிலையில், டெல்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் கௌரவமான இலக்கை எட்டியது.

132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹெய்லே மாத்யூஸ், யாஷ்டிகா பாட்டியா இருவரும் களமிறங்கினர். இருவரும் அடித்து விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அதை பூர்த்தி செய்ய நினைத்த நிலையில், ஹெய்லே மாத்யூஸ் 13 ரன்களிலும், யாஷ்டிகா பாட்டியா 4 ரன்களிலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.

23 ரன்களில் 2 விக்கெட்டுகள் பறிபோனாலும், அடுத்து களமிறங்கிய நாட் சிவர் 55 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தும், ஹர்மன்ப்ரீத் கவுர் 39 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 72 ரன்களை எடுத்த நிலையில் ஹர்மான்பிரித் கவுர் 37 ரன்களில் ரன் அவுட் ஆனார். அடுத்து நாட் சிவருடன் ஜோடி சேர்ந்த அமீலா கேர் 8 பந்தில் 14 ரன்கள் அடித்தார்.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தநிலையில், 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை தோற்கடித்து, மகளிர் பிரீமியர் லிக் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com