சிஎஸ்கேவின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை அதிகப்படுத்திய மும்பை அணியின் தோல்வி!

சிஎஸ்கேவின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை அதிகப்படுத்திய மும்பை அணியின் தோல்வி!
Published on

டைபெற்று வரும் ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டங்களில் நேற்று மும்பை அணியும் லக்னோ அணியும் விளையாடின. இந்தப் போட்டியில் மும்பை அணி தோல்வியைத் தழுவியது. இருந்தாலும் லக்னோ அணி பெரிய ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை என்பதால்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு அதிகமாகி உள்ளது. இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் பெரிதும் சந்தோஷத்தில் மூழ்கி இருக்கிறார்கள்.

இந்த வருட ஐபிஎல் போட்டிகளின் லீக் ஆட்டங்கள் ஏறக்குறைய முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், அடுத்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் யார் யார் என்பது குறித்து அறிய ரசிகர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது வரைக்கும் குஜராத் அணி மட்டுமே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. அதேபோல், ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

இதனையடுத்து, மீதமுள்ள ஏழு அணிகளில் மூன்று அணிகள் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டி இருக்கிறது. சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் மீதமிருக்கும் ஒரு லீக் ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும். ஒருவேளை அந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தாலும், லக்னோ, மும்பை, பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளில் இரண்டு அணிகள் ஒரு போட்டியில் தோல்லி அடைந்தாலும் சென்னை அணி ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும்.

அதேபோல், மும்பை மற்றும் லக்னோ அணிகள் தங்களது அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால் சென்னை அணி நான்காவது இடத்துக்குச் சென்று விடும். இந்த நிலையில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் விளையாடும் இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால்தான் சிஎஸ்கே அணி அடுத்த சுற்றுக்குச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com