டெஸ்ட் வரலாற்றில் சாதனை படைக்கப்போகும் நாதன் லயன்!

டெஸ்ட் வரலாற்றில் சாதனை படைக்கப்போகும் நாதன் லயன்!

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கவுள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் புதிய சாதனை ஒன்றையும் படைக்க உள்ளார்.

மிகவும் பிரபலமான தொடர்களில் ஒன்றாக கருதப்படுவது ஆஷஸ் தொடர். இத்தொடரில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் போட்டி முடிந்த நிலையில், ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதையடுத்து இன்று 2வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இதில் எப்படியாவது ஜெயிக்கவேண்டும் என்ற முனைப்போடு இங்கிலாந்து அணி போராடும்.

இப்போட்டியைப் பொறுத்தவரை, ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரமும், அசாத்தியமாக ஸ்பின் போட்டு பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் நாதன் லயன் இன்றைய டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் மூலமாக தொடர்ச்சியாக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைக்க உள்ளார்.

அதுமட்டுமல்லாமல், அவர் இதுவரை 121 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 495 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இன்னும் 5 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றும் நிலையில், 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 8வது வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.

100 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடியவர்களில் அலெஸ்டர் குக், ஆலன் பார்டர், சுனில் கவாஸ்கர், மார்க் வாக், பிரெண்டன் மெக்கல்லம் என்று பேட்ஸ்மேன்கள் மட்டுமே இருந்துள்ள நிலையில் முதலாவதாக ஒரு பந்துவீச்சாளராக தொடர்ச்சியாக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது நாதன் லயன் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com