முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்த நியூசிலாந்து!

முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்த நியூசிலாந்து!
new zealand
Published on

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டியின் சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து அணி அயர்லாந்து அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது.

இப்போட்டி நியூசிலாந்து அணிக்கு முக்கிய போட்டியாக கருதப்பட்ட நிலையில் முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியது.

ஃபின் ஆலனும், கான்வேயும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினர். ஆரம்பம் முதலே இருவரும் சிறப்பாக ஆடி வந்தனர். ஃபின் ஆலன் அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 32 ரன்களை எடுத்தார். இந்நிலையில் அணியின் ஸ்கோர் 52 ஐ தொட்டபோது, ஃபின் ஆலன் ஃபியன் ஹேண்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அடுத்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் களத்தில் இறங்கினார். இந்த தொடரில் இதுவரை சிறப்பாக விளையாடாத கேன் வில்லியம்சன் இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் தனது சிறப்பான அதிரடி விளையாட்டை வெளிப்படுத்தி 5 பவுண்டரி, 3 சிக்சர் உட்பட 35 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் கேன் வில்லியம்சன் இந்த தொடரில் முதல்முறையாக 100 ரன்களுக்கு மேல் ஸ்ட்ரைக் ரேட்டை அடைந்தார்.

அணியின் ஸ்கோர் 174ஐ அடைந்தபோது அயர்லாந்து வீரர் ஜோஸ் லிட்டில் 19வது ஓவரை வீசினார். அப்போது 2வது, 3வது, 4வது பந்துகளில் வில்லியம்சன், நீஷம், சாண்ட்னர் என வரிசையாக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

இறுதியில் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. முதலில் களமிறங்கிய பால்பிரின், பால் ஸ்டர்லிங் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருந்தும், பால் ஸ்டர்லிங் 37 ரன்களுடனும், கேப்டன் பால்பிரின் 30 ரன்களுடனும் வெளியேறினர்.

அதன்பின் களமிறங்கிய வீரர்கள் பெரிதாக ரன்கள் ஏதும் எடுக்காத நிலையில் விக்கெட்டுகள் மளமளவென விழ, அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைநத்து.

இதன்மூலம் அரையிறுதி சுற்றிற்குள் முதல் அணியாக நியூசிலாந்து அணி நுழைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com