நான் என்ன பண்ணாலும் ட்ரோல் செய்றாங்க… எனக்கு எப்படி சமாளிக்கிறதுன்னே தெரில – கே.எல்.ராகுல் வருத்தம்!

K.L.Rahul
K.L.Rahul
Published on

இந்திய வீரர் கே.எல்.ராகுல் தன்னை எப்படியெல்லாம் ட்ரோல் செய்கிறார்கள் என்றும், அதை சமாளிக்க முடியாமல் தவிப்பது குறித்தும் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

கே.எல்.ராகுல் இலங்கைக்கு எதிரான போட்டியில் சரியாக விளையாட முடியவில்லை என்பதால், துலீப் ட்ராபியில் தனது ஃபார்மை மீட்டெடுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் பேக் அப் தொடக்க வீரர், பேக் அப் விக்கெட் கீப்பர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்று எந்த ரோல் கொடுத்தாலும் சிறப்பாக செய்யக்கூடியவர் கே.எல். ராகுல். இவர் ஃபார்முக்கு வருவது இந்திய அணிக்கும் மிகவும் தேவை.

கடந்த ஐபிஎல் தொடரில்கூட அவர் அணி தோல்வியடைந்ததும், அணியின் ஓனர் அவரை அனைவர் முன்னிலையிலும் கடுமையாக பேசினார். அப்போது ட்ரோல் செய்தவர்கள்கூட ராகுலின் நிலைக்கு பரிதாபப்பட்டனர். அந்த அளவுக்கு மோசமான சூழ்நிலைகளை எதிர்க்கொண்டார்.

அந்தவகையில் கே.எல்.ராகுல் இந்திய அணி வீரர்கள் உபகரணங்களை ஏலத்தில் விட்டு, மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்விக்காக ரூ.1.98 கோடியைத் தொண்டு நிறுவனத்திற்கு அளித்திருந்தார். அப்போது ட்ரோல்கள் குறித்து பேசினார்.

“சமூக வலைதளங்களில் வரும் ட்ரோல்களையெல்லாம் எளிதாக சமாளித்து வந்தேன். அதனை எப்போதும் கண்டுக்கொள்ளவே மாட்டேன். ஆனால் 2 ஆண்டுகளுக்கு முன் எனனை அதிகளவு ட்ரால் செய்தனர். நின்றால் ட்ரால், உட்கார்ந்தால் கூட ட்ரால் என்ற நிலையை சந்தித்தேன்.

இதையும் படியுங்கள்:
ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக களத்தில் இறங்கிய கே.எல்.ராகுல்!
K.L.Rahul

இந்திய அணியில் விளையாடிய 3, 4 ஆண்டுகளில் அனைவருடனும் எளிதாக பழகும் குணம் வந்தது. ஒரு அறையில் 100 பேர் இருந்தால் கூட நான் மிகவும் சகஜமாக பேச முடியும் என்று நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால், காபி வித் கரன் ஷோ என்னை பயமுறுத்திவிட்டது. அது முழுவதுமாகவே வேறு மாதிரியான உலகமாகத் தோன்றுகிறது. பள்ளிக் காலங்களில் நான் மிகவும் நல்ல பையனாகவே இருந்து வந்திருக்கிறேன். பள்ளியில் கூட நான் சஸ்பென்ட் செய்யப்படவில்லை. ஏன்? தண்டனைக்கூட அப்போது பெற்றதில்லை. ஆனால் திடீரென இந்திய அணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டேன். அதுபோன்ற ஒரு சூழலை என் வாழ்நாளில் எதிர்கொண்டதில்லை. அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது கூட எனக்கு தெரியவில்லை.” என்று பேசினார்.

இவரின் இந்த வார்த்தைகள் ரசிகர்கள் மத்தியில் ஒரு சோக அலையை ஏற்படுத்தியிருக்கிறது.


Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com