எளிதில் செய்ய கூடிய சத்து மிகுந்த சமையல் குறிப்புகள்!

எளிதில் செய்ய கூடிய சத்து மிகுந்த சமையல் குறிப்புகள்!

(1) வாழைக்காய், பூ, தண்டு, இவைகளை சமைக்கும் போது 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்தால் மிகுந்த மணத்துடன் இருக்கும்.

(2) வெகு கரகரப்பான வெங்காய பக்கோடா தயாரிக்க வெங்காயத்தை துருவினாற் போல் நறுக்கி உப்புத்தூள் கலந்து பத்து நிமிடங்கள் ஊறியதும் அதிலே கடலைமாவு, மசாலா பொடிகள் சேர்த்து தண்ணீர்சேர்க்காமல் 2 ஸ்பூன் உருகிய நெய் மட்டும் விட்டு பிசைய வேண்டும்.

(3) ஒரு கரண்டி பச்சை வேப்பம் பூ, ஒரு ஸ்பூன் உளுந்தம்பருப்பு, 2 மிளகாய் வற்றல், சிறிது பெருங்காயம் இவற்றை எண்ணெய் விட்டு வறுத்துக் கொண்டு 2 ஸ்பூன் தேங்காய் தேவையான அளவு புளி, உப்பு சேர்த்துத் துவையல் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் நன்றாக இருப்பதுடன் பித்தத்திற்கும் நல்லது.

(4) தயிர் வடைக்கு உளுந்து அரைக்கும் பொழுது மாவின் அளவிற்கு தகுந்தாற்போல் ஒன்று அல்லது பாதி வாழைப்பழம் (எந்த பழமாக இருந்தாலும் சரி) போட்டு ஆட்டி தயிர் வடை செய்யலாம்.

(5) பாகற்காய் பொரியல் செய்யும் பொழுது முளைக்கீரை அல்லது அரை கீரையை பொடியாக நறுக்கி பாகற்காயுடன் சேர்த்து வதக்கி சாப்பிட்டால் ருசியாகவும், மணமாகவும் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com