ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் வீரர்களின் ரன் ரேட்ஸ் கணக்கில் 2023 காண பேட்டிங் தரவரிசை பட்டியல் வெளியானது. இதில் ஒன்பதாம் இடத்தில் இருந்த விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி ஆறாம் இடத்தை பிடித்திருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா.
ரோகித் சர்மா 2007 ஆம் ஆண்டு இந்திய தேசிய அணியில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். அதேபோல் விராட் கோலி 2008 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். கடந்த16 ஆண்டுகளாக கோலிக்குப் பின்னே தான் ரோஹித் சர்மா கிரிக்கெட் தரவரிசையில் இருந்து வருந்தார். அணியின் துவக்க வீரராக மாறிய பின்னரும் ரோகித் சர்மாவால் விராட் கோலியை முந்தமுடியவில்லை. ஆனால் ரோகித் சர்மா பேட்டிங் தரவரிசையில் முன்னேறி வருவதற்கு இப்போது நடந்து கொண்டிருக்கும் ஐசிசி உலக கோப்பையே ஒரு மிகப்பெரிய அடித்தளமாக அமைந்தது .
அக்டோபர் 11ம் தேதி நடந்த ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் ரோகித் ஷர்மா 84 பந்துகளில் 131 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் ஆனார். அதேபோல் அக்டோபர் 14ம் தேதி நடந்த பாகிஸ்தானுடனானா போட்டியில் ஷர்மா 63 பந்துகளில் 86 ரன்கள் அடித்து தனது ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளின் ரன் ரேட்ஸ்களை அதிகமாக்கினார். இதன் மூலம் ரோகித் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பேட்டிங் தரவரிசையில் 719 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தை பிடித்துள்ளார். விராட் கோலி அக்டோபர் 8-ம் தேதி நடந்த ஆஸ்திரேலியா உடனான போட்டியில் அணியின் இக்கட்டான சூழ்நிலையில் 85 ரன்கள் அடித்து தரவரிசையில் 711 புள்ளிகள் உடன் ஒன்பதாம் இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் 836 புள்ளிகளுடன் இருக்கிறார். இரண்டாம் இடத்தில் இந்திய வீரர் சுப்மன் கில் 818 புள்ளிகளுடன் இருக்கிறார். நடப்பு உலக கோப்பையில் இனிவரும் போட்டிகளில் நன்றாக ஆடினால் கில் பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தை பிடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் ஜோஸ் ஹாசன் முதல் இடத்தில் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் இந்திய வீரர் முகமது சிராஜும் எட்டாவது இடத்தில் குலதிப் யாதவும் இருக்கிறார்கள். ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் முதலிடத்தில் வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் மற்றும் ஒன்பதாவது இடத்தில் இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா இருக்கிறார்கள்