.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் நாளை அக்டோபர் 19 ஞாயிற்றுக்கிழமை அன்று, ஒரு நாள் போட்டியுடன் தொடங்குகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஒரு நாள் தொடர் இம்முறை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கு முக்கிய காரணமே இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தான்.
இவர்கள் இருவருமே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால், ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றனர். அடுத்து வரும் 2027 உலகக்கோப்பை வரை ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருவரும் திட்டமிட்டுள்ளனர். இருப்பினும் உலகக்கோப்பைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளே உள்ள நிலையில் கோலி மற்றும் ரோஹித் இருவரும் நல்ல ஃபார்மில் இருப்பது அவசியம்.
சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களம் காண இருப்பதால், இந்தத் தொடரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். அதோடு ஆஸ்திரேலியாவிற்கு ரோஹித் மற்றும் கோலி விளையாட செல்வது இதுவே கடைசி முறையாக இருக்கக்கூடும் என்பதால், அந்நாட்டு ரசிகர்களும் இந்தத் தொடரின் அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். மேலும் இரு ஜாம்பவான்கள் ஆஸ்திரேலியாவிற்கு விளையாடுவது இதுவே கடைசி முறை என்பதால் அவர்களுக்கு தகுந்த மரியாதையை அழிக்க வேண்டும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு முன்பு வரை இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டு வந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது, புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். கிரிக்கெட் வட்டாரத்தில் இந்த அறிவிப்பு சலசலப்பை ஏற்படுத்தினாலும், இளம் வீரர்களுக்கு ரோஹித் மற்றும் கோலியின் அனுபவங்கள் அவசியம் தேவை எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவரும் 2027 உலக கோப்பையை இந்தியாவிற்கு வென்று தரவேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். உலகக் கோப்பைக்குள் இந்தியா அதிகபட்சம் 20 மஉதல் 30 ஒருநாள் போட்டிகளை மட்டுமே விளையாடும் என்பதால், இவர்கள் இருவரும் அதிக ரன்களை குவித்தால் மட்டுமே அணியில் நீடிக்க முடியும். இந்நிலையில் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது குறித்து ரோகித் சர்மாவிடம் பிசிசிஐ மற்றும் பயிற்சியாளர் கௌதம் விளக்கம் அளித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
எதிர்கால இந்திய அணியை கட்டமைக்க இளம் கேப்டன் அவசியம் என்பதால் தான், சுப்மன் கில்லிடம் கேப்டன் பதிவு ஒப்படைக்கப்பட்டது என பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரோகித் சர்மாவால் என் மீது அழுத்தமும் இன்றி சுதந்திரமாக செயல்பட முடியும் என கவுதம் கம்பீர். மேலும் ரோஹித் மட்டும் கோலியின் அனுபவம், இளம் இந்திய வீரர்களுக்கு அவசியம் தேவை எனவும் அவர் தொரிவித்துள்ளார்.
கேப்டன் பதவியில் இருந்த போதே ஒரு நாள் போட்டிகளில் அதிரடியான தொடக்கத்தை அமைத்து தந்தார் ரோஹித் சர்மா. இந்நிலையில் கேப்டன் என்ற அழுத்தம் இல்லாமல் ரோஹித் சர்மா சுதந்திரமாக விளையாட இருப்பதால், நிச்சயமாக ஆஸ்திரேலியாவில் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் ஒரு நாள் போட்டிகளில் அசாத்திய ஃபார்மில் இருக்கும் விராட் கோலி, நீண்ட இடைவெளிக்குப் பின் களம் காண்கிறார். கோலியும் ரன் வேட்டையில் அசத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.