#OWOFCup
#OWOFCup

முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களின் கிரிக்கெட் ஷோ!

Published on

One family vs one world எனும் கண்காட்சி கிரிக்கெட் போட்டி நேற்று பெங்களூருவில் உள்ள சாய் கிருஷ்ணன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின், முத்தையா முரளிதரன், யுவராஜ் சிங், சமிந்தா வாஸ் ஆகியோர் வெகுநாட்களுக்குப் பின் இணைந்து விளையாடினார்கள்.

சாய் க்ளோபல் ஹுமேனிட்டேரியன் மிஷன் சார்பில் குழந்தைகள் ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு போட்டி நேற்று நடைப்பெற்றது. இந்த போட்டியில் one family மற்றும் one world என இரு அணிகளாகப் பிரிந்து மோதினார்கள். இதில் மொத்தம் ஏழு நாடுகளிலிருந்து 24 கிரிக்கெட் வீரர்கள் விளையாடினார்கள். அதாவது இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா,

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் வீரர்கள் கலந்துக்கொண்டனர். இதில் One world அணியின் கேப்டனாக சச்சின் தெண்டுல்கரும் One family கேப்டனாக யுவராஜ் சிங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். முதலில் one family அணி பேட்டிங் செய்தது. இந்த அணி 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்களைக் குவித்தது. அடுத்ததாக one world அணி சார்பாக ஓப்பனிங் செய்த சச்சின் இளம் வீரர்களுக்கு சவால் கொடுப்பதுப்போல் வெறித்தனமாக ஆடினார்.

எதிரணி சார்பாக பவுலிங் செய்த சமிந்தா வாஸ், வெங்கடேஷ் பிரசாத், மக்கயா நிடினி ஆகியோரின் பந்துகளில் சச்சின் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸரும் அடித்தார். அதேபோல் சிங்கிள் ரன்களும் ஓடி அசத்தினார். One family அணியிலிருந்து பந்து வீச முத்தையா முரளிதரன் களமிறங்கினார். சச்சின் vs முத்தையா, ஒரு சரிக்கு சமமானப் போட்டியாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நிலையில் முத்தையா தனது முதல் பந்திலேயே சச்சின் விக்கெட்டை எடுத்தது மாபெரும் ஏமாற்றமாக அமைந்தது.

சச்சின் அடித்த அந்த பந்து சிக்ஸர் போகும் என எதிர்ப்பார்த்த நிலையில் பவுண்டரி பக்கம் வரும்போது அதனை முகமது கைஃப் பிடித்துவிட்டார். என்னத்தான் சச்சின் விக்கெட் கொடுத்தாலும் வெரும் 16 பந்துகளில் 27 ரன்கள் குவித்தது இன்னும் அவர் ஃபார்மில் இருப்பதை உறுதி செய்தது. அதுமட்டுமல்லாமல் அவரது ஸ்ட்ரைக் ரேட் 168 இருந்ததும் குறிப்பிடத்தக்கது. முத்தையா முரளிதரன் சச்சின் விக்கெட்டை மட்டும்தான் வீழ்த்தினார். இஃப்ரான் பதான் கடைசி ஓவரில் சிக்ஸ் அடித்து 19.5 ஓவரிலேயே One world அணியை வெற்றியடைய செய்தார்.

logo
Kalki Online
kalkionline.com