சிறு வயதில் எதிரணி வீரர்கள் என்னை கடத்திச் சென்று மிரட்டினர் – ரவிச்சந்திர அஸ்வின்!

Aswin about his childhood
Aswin about his childhood
Published on

தான் சிறு வயதாக இருக்கும்போது எதிரணி வீரர்கள் தன்னை கடத்திச் சென்று மிரட்டியதாக ரவிச்சந்திர அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னணி வீரரான ரவிச்சந்திர அஸ்வின் ஒரு சிறந்த பவுலர் ஆவார். தமிழ்நாட்டில் பிறந்த சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திர அஸ்வின் 2011ம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் என்பதால், தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த வீரர். அந்தவகையில் அவர் தனது கடந்த காலத்தைப் பற்றி தெரிவித்திருக்கிறார்.

அதாவது, “எனக்கு ஒரு 14,15 வயதிருக்கும்போது, டென்னிஸ் பந்தில் கிர்க்கெட் விளையாடிக் கொண்டிருந்தேன். என்னுடைய அப்பாவுக்கு டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடுவதும் பிடிக்காது, அதேபோல் தெருக்களில் விளையாடுவதும் பிடிக்காது. ஆனால், நான் என் நண்பர்களுடன் டென்னிஸ் பந்தில் விளையாடுவேன். எங்கள் அணி இறுதிபோட்டிக்கு முன்னேறியது. அப்போது எதிரணி வீரர்கள் என்னை மிரட்டிய சம்பவம் இன்னும் எனக்கு ஞாபகம் உள்ளது.

காலையில் இரண்டு பேர் வந்து என்னை அழைத்துச் சென்றார்கள். நான் கூட என்னை மேட்சுக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்று நினைத்தான். ஆனால், அவர்கள் வண்டியை ஒரு இட்லி கடையில் நிறுத்தி எனக்கு இட்லி வாங்கிக்கொடுத்தார்கள். நான் டைம் ஆச்சு மேட்ச் போனும் என்று கூறினேன். அவர்கள் நீ மேட்சுக்கு செல்லக்கூடாது என்று மிரட்டினர்.

இதையும் படியுங்கள்:
பி.டி.உஷா என்னுடன் புகைப்படம் எடுத்ததை தவிர வேறு எதுவும் செய்யவில்லை – வினேஷ் போகத்!
Aswin about his childhood

எங்கள் அணியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக எதிர் டீம் பிளேயர்கள் என்னை விளையாட வரக்கூடாது என மிரட்டினார்கள். இறுதிப் போட்டியில் விளையாடினால் கையை துண்டாக்கிவிடுவேன் என்றும் மிரட்டினார்கள்.  அப்போதுதான் தெரிந்தது அவர்கள் ப்ளான். நான் வீட்டுக்கு வந்தவுடன் பயத்தில் அப்பாவிடம் கூறவில்லை. ஆனால், அவர் மீண்டும் மீண்டும் கேட்டதால் உண்மையை சொன்னேன்.” என்றார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளராக இருக்கும் அஸ்வின், வங்கதேச அணியுடனான 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறார். இதுவரை 100 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கும் இவர் 516 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பதுடன், 3309 ரன்களும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிட்டதக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com