பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வு குழு தலைவர் திடீர் ராஜினாமா..நடந்தது என்ன?

 inzamam ul haq
inzamam ul haq

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் இன்சமாம் உல் ஹக் தானாகவே முன்வந்து தனது பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார் என தகவல் வெளியாகிவுள்ளது.

உலககோப்பை 13வது லீக் இந்தியாவில் மிக சுவாரசியமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி தொடர் தோல்விகளை சந்தித்து மோசமான நிலையில் உள்ளது. இதன் காரணமாகத்தான் தேர்வு குழு தலைவர் இன்சமாம் ராஜினாமா செய்துள்ளார் என அனைவரும் எண்ணிக்கொண்டிருந்த நிலையில் வேறு ஒரு காரணம் கூறப்படுகிறது.

நடைபெற்று வரும் உலககோப்பை தொடருக்கு முன்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பிடம் பாகிஸ்தான் அணி தங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய சில வேண்டுகோள்களை எடுத்து வைத்தது. அதாவது தங்களுக்கு கூடுதல் சம்பளம் , விளம்பர வருவாயில் பங்கு மற்றும் தங்களுக்கு தேவையான வசதிகளை செய்துத்தர வேண்டுமென்று ஒப்பந்தம் செய்துதருமாறு கேட்டது. உலககோப்பை நெருங்கி வரும் சமயத்தில் வேறு வழியின்றி பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பும் அனைத்து வசதிகளையும் செய்துதர ஒப்புக்கொண்டது.

அப்போது பாகிஸ்தான் அணிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பிற்கும் ஒரு பாலமாக இருந்தது தேர்வு குழு தலைவர் இன்சமாம் உல் ஹக் தான். அவர் முழுக்க முழுக்க அணி வீரர்களுக்கே துணை நின்றதால் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு நிர்வாகிகளுக்கு ஒரு பெரிய அதிருப்தி ஏற்பட்டது. இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

inzamam ul haq
inzamam ul haq

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் விளம்பர ஏஜென்ட் தல்ஹா ரெஹ்மானியின் நிறுவனம்தான் யாசோ இண்டெர்னேஷனல் லிமிடேட். இந்நிறுவனத்துடன் இன்சமாம் உல் ஹக் பங்குத்தாரராக இருப்பது தெரியவந்தது. இப்போது அந்த நிறுவனம் பாபர் அசாம், ரிஸ்வான், அப்ரிடி ஆகியோரின் விளம்பர ஒப்பந்தங்களை நிர்வகித்து வருகிறது. மேலும் ரிஸ்வான் அந்நிறுவனத்தின் இணை உரிமையாளர் என்றும் செய்தி வெளியானது.

ஆகையால் யாசோ நிறுவனம் , இன்சமாம் ஆகியோர்தான் கிரிக்கெட் வீரர்களை தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்த்தார்களா? என்ற சந்தேகத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமான பிசிபி எழுப்பியுள்ளது. மேலும் இந்த நிறுவனத்தின் விளம்பர ஒப்பந்ததாரராக இருக்கும் வீரர்களைத்தான் அணியில் நிரந்தர வீரராக இன்சமாம் வைத்திருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல்களும் வெளிவந்துள்ளது. அப்போது இதனால்தான் பாகிஸ்தான் அணியின் தொடர் தோல்விக்கு பிறகும் அணியின் கேப்டனை மாற்றவில்லையா என்ற கேள்வி கிரிக்கெட் நிபுணர்களிடையே வலுத்த விவாதமாக மாறியுள்ளது.

இதனால் ஐந்து பேர் கொண்ட குழு அமைத்து இன்சமாமை விசாரிக்க கூறி பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு வலியுறுத்தி உள்ளது. இதைப்பற்றி இன்சமாம் என்ன கூறினார் என்றால்,” எனக்கும் யாசோ நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, மீடியாவில் வரும் தவறான செய்திகளை விசாரிக்க கிரிக்கெட் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது . அதற்கு நான் என்னுடைய முழு ஒத்துழைப்பையும் தருகிறேன். மேலும் நான் இந்த தலைமை பதிவியிலிருந்து விலகுகிறேன்.” என்றார்.

உலககோப்பை தொடர் இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் மிக பெரிய பூகம்பமாகவும் மாற வாய்ப்புள்ளது. வீரர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் கடமை பிசிபியுடையது. அதேபோல் சரியான வழியில் தங்கள் உரிமையை பெறுவது பாகிஸ்தான் வீரர்களின் கடமை. இந்த விவகாரத்தில் இனி என்ன நடக்க போகிறது என்று ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் இருக்கிறார்கள். கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவு எந்த பக்கம் என்பதை காத்திருந்து பார்ப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com