விராட் கோலியை பாபர் அசாமுடன் ஒப்பிட்ட பாகிஸ்தான் வீரர்… ரசிகர்கள் ஆவேசம்!

Virat Kohli with Babr azam
Virat Kohli with Babr azam
Published on

பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து பாகிஸ்தான் வீரர் ஃபாக்கர் ஜமான் இதுகுறித்து பேசியுள்ளார். அவர் விராட் கோலி மற்றும் பாபர் அசாம் ஆகியோரை ஒப்பிட்டு பேசியது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இதனையடுத்து இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியிலிருந்து பாபர் அசாம் நீக்கப்பட்டுள்ளார். பாபர் அசாம் சமீபக்காலமாக சரியாக ரன் எடுக்கவில்லை என்பதே இதற்கு காரணமாக கருதப்படுகிறது. டெஸ்ட்போட்டிகளில் கடைசியாக ஆடிய 18 இன்னிங்ஸ்களில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

இதுகுறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இதனையடுத்து அவர் இந்தப் போட்டியிலிருந்து நீக்கப்பட்டார். அவருடன் ஷஹீன் ஷா அப்ரிடி, நசிம் ஷா ஆகியோரும் நீக்கப்பட்டு இருக்கின்றனர். இந்தநிலையில்தான் பாகிஸ்தான் வீரர் ஃபாக்கர் ஜமான் பாபர் அசாமுக்கு ஆதரவாக ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். “விராட் கோலி 2020 முதல் 2023 வரை மோசமான ஃபார்மில் இருந்த போதும், அவரது பேட்டிங் சராசரி மோசமாக இருந்த போதும், அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்படவில்லை. அதேபோல் பாகிஸ்தான் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக இருக்கும் பாபர் அசாமையும் விராட் கோலியை போல நாம் பாதுகாக்க வேண்டும். அவரை புதைக்கும் வேலையை செய்யக்கூடாது.” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:
குதிரைப் பந்தயத்தில் இத்தனை வகைகள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?
Virat Kohli with Babr azam

இதற்கு இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். ஏனெனில், விராட் கோலி அந்த சமயங்களில் சதம் அடிக்கவில்லை என்றாலும், அவ்வப்போது அரைசதம் அடித்திருக்கிறார். மேலும் ஒரு வீரராகவும் கேப்டனாகவும் நிறைய சாதனைகளை படைத்திருக்கிறார். முக்கியமான விளையாட்டுகளில் ரன்களும் சேர்த்திருக்கின்றார் என்று பதிவிட்டு வருகின்றனர்.

அதே போல பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பும் இந்த ஒப்பீட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. ஃபாக்கர் ஜாமானிடம் உடனடியாக பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு அதிகாரிகள் விளக்கம் கேட்டதோடு, அவரை கண்டித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com