பதநீரின் பற்பல நன்மைகள்!

பதநீரின் பற்பல நன்மைகள்!
Published on

வருடத்தில் மூன்று மாதங்கள் மட்டும் கிடைக்கும் ஒரு பானம் தான் பதநீர். பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீரில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. ஏனெனில் இதில் ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.

இதில் கால்சியம், சர்க்கரைச் சத்து, தயாமின், வைட்டமின் சி, புரதச்சத்து மற்றும் நிகோனிக் அமிலம் உள்ளிட்ட சத்துகள் அடங்கியுள்ளன.

பதநீர் சர்க்கரை சத்து நிறைந்தது என்பதால் கோடையினால் ஏற்படும் சோர்வினை நீக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும்.

பதநீரை 48 நாள்கள் தொடர்ந்து குடித்து வந்தால், மேக நோய்கள் தணியும். பெண்களைப் படுத்தும் வெள்ளைப்படுதல் பிரச்னைக்கு இது நல்ல மருந்து.

கோடையில் பதநீர் குடித்து வந்தால், அதில் உள்ள இரும்புச்சத்து உடலில் உள்ள பித்தத்தைக் குறைத்து, இரத்த சோகையையும் விரட்டும்.

வெந்தயத்தை 50 கிராம் எடுத்து லேசாக வறுத்து பொடித்து காலை,மாலை இருவேளை 50 மிலி அளவு சூடாக்கிய பதநீரில் கலக்கி அருந்திவர இரத்த கடுப்பு, மூல சூடு தணியும்.

எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும் ஆற்றல் பதநீருக்கு உண்டு.

பதநீரில் உள்ள கால்சியம் பற்களை வலிமைப்படுத்தி, ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டாலும் அதனைத் தடுக்கும்.

பதநீரை, பழைய கஞ்சியுடன் சேர்த்துப் புளிக்க வைத்து ஆறாத புண்கள், கொப்புளங்கள் மீது தடவிவந்தால் குணம் கிடைக்கும்.

பதநீரைக் குடித்தால், அதில் உள்ள நார்ச்சத்துக்களால் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் நீங்கும். மேலும் வயிற்றுப் புண் இருந்தாலும் குணமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com