தனது முதல் ஒருநாள் போட்டியில் 16 வொய்டு பந்துகளை வீசிய பதிரணா.

தனது முதல் ஒருநாள் போட்டியில் 16 வொய்டு பந்துகளை வீசிய பதிரணா.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த ஆண்டு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமாக மதிஷா பகிராணாவைச் சொல்லலாம். அந்த அளவுக்கு தன்னுடைய பௌலிங் திறமையால் எதிரணியினரை திணறடித்தார். ஆனால் தனது நாட்டுக்காக விளையாடும் முதல் ஒருநாள் போட்டியில் மோசமாக சொதப்பி இருக்கிறார் பதிரணா. 

2023 ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் மதிஷா பதிரணா. பல முக்கிய போட்டிகளில் அவர் விக்கெட்டுகளை எடுத்து சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு வித்துட்டுள்ளார். இவருடைய வயது 21 தான் என்றாலும், சென்னை அணியின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டாகவே மாறி இருக்கிறார். இதற்கு முன்பாக டெத் ஓவர்களை சிறப்பாக வீசிய பிராவோ, ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகிய பிறகு, அந்த இடத்தை இவர் கச்சிதமாகப் பூர்த்தி செய்திருக்கிறார் என்றே சொல்லலாம். இவருடைய பந்துவீச்சு பார்ப்பதற்கு மலிங்காவைப் போலவே இருப்பதால், ரசிகர்கள் இவரை குட்டி மலிங்கா, பேபி மலிங்கா என்று அன்போடு அழைக்கின்றனர். 

இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய போது, கேப்டன் தோனி இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு ஒரு கோரிக்கை வைத்தார். அதாவது, பதிரணாவை டி20 போட்டிகளில் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றும், மேலும் சில முக்கிய ஒரு நாள் போட்டிகளில் மட்டும் விளையாட வைத்தால் நன்றாக இருக்கும் எனக் கூறி இருந்தார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பதிரணாவை விளையாட வைக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தி இருந்தார். முழுக்க முழுக்க ஐசிசி தொடர்களில் மட்டுமே பதிரணாவைப் பயன்படுத்துங்கள், இவர் உங்கள் அணியின் சொத்து எனப் பாராட்டி இருந்தார். 

இந்நிலையில் தோனியின் பேச்சை இலங்கை கிரிக்கெட் வாரியம் கேட்காமல், ஐபிஎல் போட்டி முடிந்த இரண்டு நாட்களிலேயே பதிரணாவை அவசர அவசரமாக முதல் ஒருநாள் சர்வதேசப் போட்டியில் அறிமுகம் செய்து விளையாட வைத்தனர். ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டது போல், இதிலும் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பதிரனாவால் அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. மிகவும் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். மொத்தம் 8.5 ஓவர்கள் வீசி 66 ரன்களை எதிரணியினருக்கு விட்டுக் கொடுத்தார். இதில் ஒரு விக்கட்டை மட்டுமே கைப்பற்றி, 16 வொய்டு பந்துகளை வீசி இருக்கிறார். மேலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. 

இதனால் இலங்கை ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து, சிஎஸ்கே வில் சிறப்பாக செயல்பட்டவர் ஏன் இலங்கை அணியில் சொதப்பினர் என சந்தேகக் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இதற்கு இந்திய ரசிகர்கள், பதிரணாவை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது தோனிக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. உங்கள் அணி வீரர்கள் அதை சரியாகச் செய்யவில்லை என பதிலளித்தனர். மேலும் இதுபோன்ற அவசர அவசரமாக ஒரு நாள் போட்டிகளில் விளையாடினால் அவருடைய பந்துவீச்சு பாதிக்கப்படும் என ஏற்கனவே தோனி சொன்னதையும் சுட்டிக்காட்டினர். 

எனவே, தயவு செய்து பதிரனாவுக்கு போதிய அவகாசம் கொடுத்து, சரியான முறையில் அவரைப் பயன் படுத்துங்கள் என சிஎஸ்கே ரசிகர்கள் அறிவுரை கூறியிருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com