ஐபிஎல் 2026: பஞ்சாப் அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி..!

தர்மசாலாவில் இன்று நடைபெற்ற 55-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி டெல்லி அணி அதிரடி வெற்றியை பதிவு செய்தது.
Delhi Capitals team
Delhi Capitals teamimage credit- thefederal.com
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

இமாசலபிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் இன்று நடைபெறும் 55-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

பஞ்சாப் அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, ஒரு முடிவில்லை, 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 13 புள்ளிகளை பெற்றுள்ளது.

டெல்லி அணி 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வி கண்டு பிளே-ஆப் சுற்றை ஏறக்குறைய இழந்து விட்டது. இந்த ஆட்டத்தில் தோற்றால் முழுமையாக முடிந்து விடும்.

இவ்விரு அணிகளும் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 18-ல் பஞ்சாப் அணியும், 17-ல் டெல்லி அணியும் வென்று இருக்கின்றன.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸில் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய பஞ்சாப் அணி, 20 ஓவர் முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்களை குவித்தது.

அதனை தொடர்ந்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய டெல்லி அணி அதிரடியாக விளையாடி இறுதியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் டெல்லி அணி தனது 5-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com