#BREAKING ஐபிஎல் 2026: தோல்வியே அறியாத பஞ்சாப்! லக்னோவை புரட்டி எடுத்து புள்ளிப்பட்டியலில் முதலிடம்!

நியூ சண்டிகாரில் அரங்கேறிய இன்றைய போட்டியில் லக்னோவை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்தது.
PBKS vs LSG
PBKS vs LSGimage credit-outlookindia.com
Updated on

ஐபிஎல் போட்டி தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் அரங்கேறுகிறது. இதில் நியூ சண்டிகாரில் இன்று நடைபெறும் 29-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

பஞ்சாப் இந்த சீசனில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக கம்பீரமாக வலம் வருகிறது. ஆனால் நடப்பு தொடரில் ஒரு ஆட்டத்தில் கூட 190 ரன்களை கடக்காத லக்னோ அணி விளையாடிய 5 போட்டிகளில் 2 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது.

இன்றைய போட்டியில் பலம் வாய்ந்த பஞ்சாப் அணியின் சவாலை லக்னோ சமாளிக்குமா? என்பது தான் பலத்த கேள்விக்குறியாக உள்ளது.

இவ்விரு அணிகளும் 6 முறை நேருக்கு நேர் மோதியதில் தலா 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பாண்ட் பந்துவீச்சை தேர்வு செய்ய, அதனை தொடர்ந்து பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்களை குவித்தது.

255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய லக்னோ அணி ஆரம்பம் முதலே ரன் எடுக்கமுடியாமல் திணறி இறுதியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இதன் மூலம் லக்னோ 4-வது தோல்வியை சந்தித்துள்ள நிலையில், பஞ்சாப் அணி தோல்வியே சந்திக்காமல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com