IPL 2026: 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்..!!

இமாசலபிரதேசம் தர்மசாலாவில் இன்று நடைபெற்ற 58-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி, மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது.
PBKS vs MI
PBKS vs MIimage credit-asiacup.com.in
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

இமாசலபிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் இன்று நடைபெறும் 58-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை எதிர்கொள்கிறது.

பஞ்சாப் அணி 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, ஒரு முடிவில்லை, 4 தோல்வியுடன் 13 புள்ளிகளை பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது.

மும்பை அணி 11 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 8 தோல்வி கண்டு பிளே-ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் பரிதாபமான நிலையில் இருக்கும் இந்த அணி புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 35 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 18 ஆட்டங்களில் பஞ்சாப்பும், 17 ஆட்டங்களில் மும்பையும் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் மும்பை அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்களை குவித்தது.

அதனை தொடர்ந்து 201 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய மும்பை அணி அதிரடியாக விளையாடி இறுதியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் மும்பை அணி தனது 4-வது வெற்றி பதிவு செய்தது.

logo
Kalki Online
kalkionline.com