#BREAKING IPL 2026: தொடரும் வெற்றி நடை! ஐதராபாத்தை வீழ்த்தி 4-வது வெற்றியை பதிவு செய்தது பஞ்சாப்!

இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை தோற்கடித்து ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது.
PBKS vs SRH
PBKS vs SRHimage credit-timesofindia.indiatimes.com
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று 2 லீக் ஆட்டத்தின் முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் பலப்பரீட்டை நடத்துகின்றன.

இவ்விரு அணிகளும் இதுவரை 24 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியதில் 17-ல் ஐதராபாத்தும், 7-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில், இன்றைய போட்டிக்கான டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்களை குவித்தது.

அதனை தொடர்ந்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய பஞ்சாப் அணி, ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி இறுதியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.

நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத பஞ்சாப் அணி இந்த வெற்றியின் மூலம் தனது 4வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com