புஜாரா, ரஹானே போன்ற வீரர்கள் அவசியம் தேவை: ஏன் தெரியுமா?

Rahane -Pujara
Defence
Published on

டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுப்பாட்டத்தில் சிறந்து விளளையாடக் கூடிய வீரர்கள் தான் தேவை. தற்போதைய இந்திய அணி புஜாரா மற்றும் ரஹானே போன்ற வீரர்களைத் தவற விடுகிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவ்வகையில் தடுப்பாட்ட வீரர்களின் ஏன் அவசியம் தேவை என்பதை அலசுகிறது இந்தப் பதிவு.

சமீப காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி பாணி அரங்கேறி வருகிறது. இது பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும், உண்மையான டெஸ்ட் கிரிக்கெட்டை பாதிக்கக் கூடும். ஆம், அதிரடி ஆட்டத்தால் ரன் குவிப்பதை மட்டும்லல, விக்கெட்டுகள் சீட்டுக் கட்டுகள் போல் சரிவதையும் நாம் காண நேரிடும். இங்கிலாந்து அணி பேஸ்பால் முறையில் அதிரடி டெஸ்ட் கிரிக்கெட்டை கையில் எடுத்தது. இருப்பினும் ஒரு சில போட்டிகள் வெற்றியைக் கொடுத்தாலும், பல போட்டிகளில் தோல்வியே மிச்சம். சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிரடியாக விளையாடி முதல் போட்டியை வென்றிருந்தாலும் கூட, அடுத்த இரண்டு போட்டிகளில் விக்கெட்டுகளை விரைவாக இழந்து, தொடரையும் இழந்தது. இதே நிலை தான் தற்போது இந்திய அணிக்கும் ஏற்பட்டுள்ளது.

கிரிக்கெட்டிற்கு அதிரடி ஆட்டம் தேவை தான். ஆனால் அது டெஸ்ட் போட்டிகளில் முழுமையாக எடுபடாது. ஓரிரு போட்டிகளின் வெற்றி அதிரடியால் கிடைத்தவை தான்; ஆனால் தடுப்பாட்டம் தான் டெஸ்ட் கிரிக்கெட்டின் பிரதான ஆட்டம். இந்திய அணியில் ராகுல் டிராவிட் மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர், விக்கெட் விழும் வேளையில் நங்கூரமாய் நின்று ரன் சேர்ப்பார்கள். அவர்களிடம் இருந்த தடுப்பாட்டம் பௌலர்களைக் கூட களைப்படையச் செய்து விடும். பௌலர்கள் களைப்படையும் போது, பேட்ஸ்மேன்களால் எளிதாக ரன்களைக் குவிக்க முடியும்.

டிராவிட் மற்றும் லட்சுமணன் போன்ற ஜாம்பவான்கள் ஓய்வு பெற்ற பிறகு, அவர்களின் இடத்தை நிரப்புவது யார் என்ற கேள்வி எழுந்தது. அப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவதாரம் எடுத்தவர்கள் தான் சேதேஸ்வர் புஜாரா மற்றும் அஜிங்கியா ரஹானே. இவர்கள் இருவரும் தடுப்பாட்டத்தில் சிறந்து விளங்கினர். அதோடு ரன்களை மெதுவாக சேர்ப்பதிலும் கில்லாடிகள். குறிப்பாக புஜாரா ஆஸ்திரேலியாயுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் 500-க்கும் மேற்பட்ட பந்துகளை சந்தித்து உலக சாதனை படைத்தார். அப்போட்டியில் புஜாராவுக்கு பந்து வீசியே ஆஸ்திரேலிய பௌலர்கள் சோர்வடைந்தனர்.

இதையும் படியுங்கள்:
சொந்த மண்ணில் இந்தியா இழந்த டெஸ்ட் தொடர்கள் எத்தனை தெரியுமா?
Rahane -Pujara

ரஹானே அயல்நாட்டு மண்ணில் நன்றாக விளையாடக் கூடிய திறமையைப் பெற்றவர். ஒருமுறை விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் பாதியில் இருந்து சொந்த காரணங்களுக்காக விலகினார். அப்போது ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்று, ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று அசத்தினார். கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் இருவரும் ரன் குவிக்க சிரமப்பட்டனர். இவர்கள் அவுட்டானது அனைத்தும் நல்ல பந்துகள் தான். இருப்பினும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் முயற்சியில் ரஹானே மற்றும் புஜாராவை கழட்டி விட்டது பிசிசிஐ.

நியூசிலாந்துக்கு எதிரான தொடரை இழந்த இந்திய அணியில் ஒருவர் கூட தடுப்பாட்டத்தை முன்னெடுக்கவில்லை. இந்த நேரத்தில் தான் புஜாரா மற்றும் ரஹானே போன்ற வீரர்கள் இந்திய அணிக்குத் தேவைப்படுகின்றனர். இவர்கள் இருவரும் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவார்களா என்பது தெரியவில்லை. ஆனால், இந்திய வீரர்கள் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. இனியும் தாமதித்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரையும் இழக்க நேரிடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com