சென்னை தி.நகர் திருப்பதி தேவஸ்தானத்தில் ஐபிஎல் கப்புக்கு பூஜை!

சென்னை தி.நகர் திருப்பதி தேவஸ்தானத்தில் ஐபிஎல் கப்புக்கு பூஜை!
Published on

நேற்று இரவு அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று முடிந்த 16வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிஸ்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து வெற்றிக் கோப்பையோடு இன்று பகல் சென்னைக்கு திரும்பியது சிஎஸ்கே அணி. அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்பிங், சிஇஓ காசி விஸ்வநாதன் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தனர். அவர்களோடு ஐபிஎல் வெற்றிக் கோப்பையும் உடன் எடுத்து வரப்பட்டது. ஐபிஎல் தொடரில் வென்றெடுக்கப்பட்ட  சிஎஸ்கேவின் இந்த ஐந்தாவது வெற்றிக் கோப்பை,  சென்னை தி.நகரில் இருக்கும் திருப்பதி தேவஸ்தான கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டு அதற்கு சிறப்புப் பூஜை செய்யப்பட்டது.

இந்த சிறப்புப் பூஜையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளரும், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனருமான என்.சீனிவாசன், சிஇஒ காசி விஸ்வநாதன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஐபிஎல் வெற்றிக் கோப்பைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு  கோயிலுக்கு வெளியில் கொண்டுவரப்பட்டது. அப்போது கோயிலுக்கு வெளியே திரண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்பு சிஎஸ்கே நிர்வாகிகள் மகிழ்ச்சியோடு அந்தக் கோப்பையைக் காண்பித்தனர். அப்போது, ரசிகர்கள் பெருத்த ஆரவாரத்தோடு சந்தோஷக் குரல் கொடுத்து தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com